பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 440 (கந்த ஆவம்) பற்றுக் கோடாக - உ. வியாக வைத்துள்ள அம்புக் கூட்டில், சேர்ந்துள்ள குளிர்ச்சியுள்ள புதிய மலர்ப் பாணங்களை * உடைய மன்மதன் வெந்து கூச்சலிட்டு விழ (விழி கண்டான்) கண்கொண்டு பார்த்தவன், (வெங்காடு அங்கு அனல்) உற. நடமாடி கொடிய (சுடு) காட்டில் நெருப்பை யேந்தி நடனம் ஆடுபவன். (அங்கு அச்சமயம் ஒன்றில் (ஆலம்) f ஆல கால விஷத்தை (சேர்த்து) ஒன்று சேர்த்து உண்டு, எட்டுத் திக்கைக் கொண்ட பூமியில் உள்ளவர்கள் (மங்காது) அழிவுறாமல் - வாட்டம் உறாமல் உண்டாற்கு - உண்டவன் - ஆகிய சிவபிரானுக்கு (ஒன்று) பொருந்திய, (அதிபதி) உபதேசத் தலைவனாய், அம் தாபம் (ஞானப் பொருளை அறிய வேண்டும் என்கின்ற) அந்த நல்ல தாகத்தைத் தீர்த்து, அழகிய அந்த ஞானப் பொருளை (அவருக்கு) உபதேசித்தவனே! (அல்லது நடமாடியாகிய சிவனுக்கும், அங்கு (ஆலம்) கடலால் சூழப்பட்ட எண்டிசைப் + பூமியை (மங்காது) கேடு உறாமல் உண்ட திருமாலுக்கும் பொருந்திய (அதிபதி) தலைவனே X சிவனுடைய - அகத்தியருடைய (அடியேனுடைய, நல்ல தாபத்தைத் தீர்த்துப் பொருளை உபதேசித்தவனே! Oஅன்புடனே அழகிய உனது திருவடியைக் கும்பிடு கின்றவர்களுடைய பாவத்தைத் தீர்த்து, (அம்புவி யிடை அழகிய இப்பூமியில் (எதற்கும்) அஞ்சாத நெஞ்சையும், (ஆக்கம்) செல்வத்தையும் தரவல்ல பெருமாளே! (என்று அடியிணை தருவாயே)

  • மன்மதனை எரித்தது - பாடல் 399-பக்கம் 510 குறிப்பு

1 நஞ்சு உண்டது - பாடல் 280-பக்கம் 211 குறிப்பு

  1. திருமால் புவி உண்டது - பாடல் 267-பக்கம் 164 குறிப்பு

X மூவர்க்கும் முருகவேள் உபதேசித்ததை குறு முனியார்க்கும், திருப்புகழ் பண்ணவர்க்கும், ஆலாலம் உண்டவர்க்கும் உபதேசித்த ஆண்டவனே." (முருகரந்தாதி) என வருமிடத்துக் காண்க O 1183 - எட்டாம் அடியை - பாடல் 67.8 அடி 8-ல் காணலாம். 28