பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/463

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 455 சடை தாங்கிய அழகிய முடிகளை உடைய முநிவர்கள் சரணம் என்று வணங்க மறையவ்ர்கள் வேதங்களை ஒத(சதி நாடகம்) தாள ஒத்துடன் கூடிய நடனத்தை அருளிய (வேணியன்) சடைதாங்கும் சிவபிரான் அருளிய குழந்தையே! (விதியானவன்) உயிர்களுக்கு ஆயுளை விதிக்கும் பிரமனது (இளையாள்) தங்கை என்னுட்ைய உள்ளத்துள் வீற்றிருக்கும் விள்ளிநாயகி மிக்க ஆசை அடையும்படி அவளது கொங்கைமேல் அணையும் முருகனே! வெளி, ஆசையோடு - ஆகாயம், திசை - இவைகளில் எல்லாம் (அடை) சேர்ந்துள்ள - றைந்துள்ள (பூவனர்) காயாம்பூ வண்ணராம் திருமாலின் மருகனே அல்லது, வெளி ஆசையோடு - பகிரங்கமான, அல்லது ஞானாகாசத்தின்மீது கொண்ட, ஆசையுடனே உன்னிடம் வரும் பூவணரின் மருகா! (மணி) ரத்னம், (முதிர்) செம்மை முதிர்ந்த (ஆட்கம்) பொன் இவை இரண்டின் (ல்வ்யில்) ஒளி கல்ந்து (வீக்ம் வீசுகின்ற அழகனே தமிழ்ப் (வெண்மதி போலவே வருவாயே) 1186. (மாடம் மதிள் சுற்றும் ஒக்க வைத்திட - வீட்டைச் சுற்றிலும் மதில் ஒருசேர வைத்துக்கட்டப்பட்டிருக்க, அந்தவீடு (கனக்க) நிறையும்படி (தனத்தில்) பொருள் சேகரித் து வைத்து அதில் - 5/ھئے( காரணமாக அது கொள்ளை போகாதிருக்க வேண்டுமே என்று (அச்சுறும்) அச்சம் கொள்ளும் --- பயத்துடன் காலம் செலுத்துபவனாய், (மால் இபம் ஒத்து) மயக்கம் கொண்ட யானை போன்று, பிரபுத்தனத்தில் - அதிகாரநிலையில் (அடைவாக) தகுதியுடனே இருந்து பெண்கள் கூட்டம் பெருத்திருக்க (தருக்கம் அற்றவர்) தன்னோடு எதிர்த்துத் தருக்கம் பேசாதவர்கள் சூழ்ந்திருந்து தரிக்க ஆதரிக்க (தன் இஷ்டப்படி ஒத்து நடக்க), இவ்வண்ணமாக வாழ்நாள் செலுத்தும் போது, (மத்தப் பரமத்தச் சித்தி கொள்) பெருமயக்கம் அல்லது பெருந் துக்கம் என்கின்ற சித்தி - இறப்பு என்கின்ற முடிவு வந்து சேரும் இறுதி நாளில் பாடையிற் கட்டி விட்டு, நண்பரானவர்கள் கூட அழுது அடித்துக் கொண்டு அல்லது ஆரவாரித்து உறுப்புள பாவை அவயவங்களோடு கூடிய பிண்ட்மாம் உருவத்தைப் - பிணத்தை எடுத்து (தழற்கு நெருப்புக்கு இரையாகும்படி விட்டு விடுவதான