பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 461 உலகெல்லாவற்றையும் ஆள்பவர், (தலங்கள்) மூவுலகையும் தமது திருவடியால் ஆளக்க வேண்டி நீண்ட திருவுருவை எடுத்தவர், முகுந்தர், (தடம் தனில் மடுவினிலே, ஆண்டு - அவ்விடத்தில், ( துஞ்சியதென்று) உயிரே போய்விட்ட்து என்று, முதலைவாயில் அகப்பட்டு (திருப்புகழ் 723), முருக வேளிடம் ரகசியப் பொருளை அறிந்து கொண்டார் அருணகிரியார் பின்பு வள்ளி மலைக்குச் சென்றதும் அருணகிரியாருக்கு இந்த ரகசியம் வெளிப்படையாகத் தானே விளங்கிற்றாம். இதனைக் "கின்னங் குறித்தடியேன் செவி நீ யன்று கேட்கச் சொன்ன, குன்னம் குறிச்சி வெளியாக்கி விட்டது. குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை முன்னங் குறிச்சியிற் சென்று கல்யாணம் முயன்றவனே." என்ற பாடலில் (கந்தரலங் 24) தெரிவிக்கின்றார்: வள்ளி என்பவள் யான் என்பது அற்றுச் செய்த தவத்தின் பயனாக, முருகன் தானே ஒடிச் சென்று அவளை மணந்தனன். இதனால் 'யான் கொட்கும் மறு நீங்கிப் பக்தி செய்வோர்க்கு ஏவல் செயும் பணியாளன் ஈசன் என்பது விளக்கமாகின்றது" இவ்வொழுக்க நிலையையே "வள்ளிச் சன் மார்க்கம்" என அருணகிரியார் கூறுகின்றார். இந்த வள்ளிச் சன் மார்க்க நிலையைத்தான் முருகன் சிவபிராற்கு உபதேசித்தனர் என்பது - வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க வல்லைக்குள் ஏற்றும் இளையோனே" (திருப்புகழ் 317) என்னும் பாடலால் விளக்கமாகின்றது: வள்ளிச் சன்மார்க்க விளக்கத்தை "அருணகிரி நாதர் வரலாறும் நூலாராய்ச்சியும் என்னும் நூலில் பக்கம் 299.302 பார்க்க.

  • தலங்கள் அளந்திட நீண்டார் -

மாவலியிடம் சென்று மூவடி மண் கேட்டு நீண்டது. பாடல் 268-பக்கம் 166; பாடல் 458 பக்கம் 24: பாடல் 668 பக்கம் 37; கீழ்க்குறிப்புக்கள்: