பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 489 1199. (வான்டயில்) காற்றில் (தென்றலே தேராகக் கொண்டு வரும்) மன்மதனை வரவழைத்து (அல்லது தென்றற் காற்றுடனே காமனையும் வரவழைத்து), பரிசுத்தமான வளையல்கள்_கல கல என்று ஒலிக்க (கற்ன்ற்) கூட்டமான் திரண்ட கூந்தல் சரிந்து விழ அதை முடித்து, (துகில்) ஆடையை, (ஆரும்) எப்படிப்பட்டவரும் (மால்கொள) ஆசை கொள்ளும்படியான வகையில் தளரும் படி உடுத்து, சிலம்பு இரண்டு பாதங்களிலும் பற்றிச் சூழ்ந்து (வாய்விட் ஒலிசெய்ய, நெற்றியில் பொட்டு இட்டு வருகின்ற மாயம் வல்ல - (நாடக மகளிர்) ஆடல்வல்ல மாதர்களின் (நடிப்பு உற்ற) பாசாங்குச் சூழ்ச்சி கொண்ட் (தோதக வலையில் வஞ்சக வலை அகப்பட்டு பூமியில் உள்ளார் அனைவரும் இவன் பெருத்த பித்தன் - (பைத்தியக்காரன்) என்று கூறும்படி - (நாணமும்) என்மானமும் (மரபும்) என் குடிப்பன்பும் ஒழுக்கம் கெட்டு, நீதி, அறிவு இவை அடியோடு மிகவும் கெட்டுப்போய், நாய் அனைய அடிமையாக (அம்மாதர்களுக்கு) நானும் அடிமைப்பட்டு விடலாமோ, ஆடுகின்ற (தோகை மயிலுக்கு நிகராகி, மயில்பீலியையும், தழையிலைகளையும், உடுத்துக் கொண்டு, யாருக்கும் இல்லாத அழகை நிரம்பப் பெற்று, யாரினும் மேலான அழகைப் பெற்று யெளவனத்தை உடையவளாப், கட்டப்பட்ட தினைப்புனத்தின் மீது வீற்றிருந்து, மான் கூட்டங்கள் எல்லாம் இவளது கண்ணழகின்முன் நமது கண் எந்த மூலை என்று மருண்டு விழிக்கும்படிச் செய்து, கவண்கல் என்னும் ஆயுதத்தை ஒரு கையிற் சுற்றி வீசி விளையாடின. வேட்டுவச் சிறுமி ஒருத்தியாகிய வள்ளிக்கு நான் வழியடிமையாம் என்று கூறி, பெருமை பொருந்திய அவளது திருவடிகள் இரண்டையும் பற்றிப் பிடித்துக் கொண்டு பல முறையும் வேதமும், தேவர்களும், நிலைபெற்ற சக்ரவாள கிரியும் அறியும்படி அவளுக்கு விலைப்பட்ட அடிமையாய், அங்கனம் அடிமைப் பட்டுள்ளதை மேருமலையில் (மிகவும் எழுத்திட்ட) நன்றாக விளங்கும் சிலா சாசனமாக எழுதி வைத்துள்ள பெருமாளே! (நீதியும் அறிவும் கெட்டு விடலாமோ)