பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 491 1200. (விரை) வாசனை வீசும் கஸ்தூரியும் மலரும் பொருந்தி விளங்கும் பரந்த கூந்தலும் அவிழ்ந்துவிழ, வாசனைப் பண்டங்கள் (மெழுகப்பட்ட பூசப்பட்ட மலையன்ன கொங்கையின் மேல் விளங்குகின்றதும், (பகல் ஒளியை) சூரியனுடைய ஒளியையும் அது அஞ்சும்படி வெருட்டவல்ல ரத்னவகைகள், (ஆரம்) முத்து (விடு தொடைகள்) இவைகளால் ஆய மாலைகள், நகத்தின் நுனியால் ஏற்பட்ட நகரேகைகளின் மீது நன்கு பொருந்தி விளங்க கண் செருக, பேச்சு குழற, அமுது நிரம்ப உண்ட கை நடுக்கம் உற்று அசைதலினால் வளைகள் கலகல என்று ஒலிக்க அழகு மேலே எங்கனும் நிறைந்து ஒழுகி விளங்க மலர் போன்ற இரண்டு அடிகளிலும் உள்ள (பரிபுரம்) சிலம்புகள் (சுருதிகள் ஆர்க்க) இசைவகைகளை ஒலிக்க (அவசம் இலகு கடல்) பரவச மயக்கம் - காம மயக்கம் விளக்க முறும் கடல் கரை புரள, இனிமை கூடி உள்ளத்தில் இன்பம் பெருக, ஆண் பெண் இருவர் உள்ளோம் என்னும் பிரிவின் அளவே காணுதற்கு அரிதான காமப்பற்றின் இடையே முழுகி என்னுடைய மனது அழிந்து கெடும் நாள்களிலும், (உனது) இரண்டு திருவடிகளின் மேன்மைத் தகுதியையும், வினையை அறுத்துத் தள்ள வல்ல வேலாயுதத்தை ஏந்தும் திருக்கரத்தையும், எழுதுதற்கு அரியதான முடியாதது ஆன திருமுகங்களையும், உனது திருவருளையும் (ஏத்தும் வகை) போற்றும் வழிவகையை (மன நிலையைத்) தந்தருள வேணும் திருமாலும் பிரமனும் திருவடியை வருடவும் (பிடிக்கவும்), (உததி) கடல் (கோத்தலற கவிழ்ந்து புரண்டு ஒலி செய்ய, வலிய வடவாமுகாக்கினி நெருப்பைக் கக்கி வீச பேய்கள் கூட்டம் கூட, வரிசையாய்க்கிடந்த மாமிசமும் மலைபோலப் பெருக, ஒலியுடன் அடிக்கப்படும் வாத்தியங்களும் நீங்காது ( ஒலிக்க). வலிய கழுகு (கொடி) காக்கை கருடன் இவைகளின் இடைவிடாது கூடின கூட்டமும், மற்றும் (குறளும்) பூத கணங்களும், அலைவீசும் ரத்தப்ப்ரவாக நதியின்மீது வந்து பரந்து சேரச்சிவந்த போர்க்களத்து, வயிரவர் கணங்களும் (ஆர்ப்பு அரவம் இட) பேரொலி செய்ய, நாள் தோறும்