பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/512

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504 முருகவேள் திருமுறை (7- திருமுறை பெருங்கு றோட்டைவிட் டுறங்கு காற்றெனப் பிறங்க வேத்தியக் - குறுமாசூர். பிறங்க லார்ப்பெழச் சலங்கள் கூப்பிடப் பிளந்த வேற்கரப் பெருமாளே (217) 1208. பிறவியற தனதன தத்தனாத் தனதன தத்தனாத் தனதன தத்தனாத் தனதான அலமல மிப்புலாற் புலையுடல் கட்டனேற் கறுமுக நித்தர்போற் றியநாதா. அறிவிலி யிட்டுணாப் பொறியிலி சித்தமாய்த் தனிதரு முத்திவிட் டனுகாதே; பலபல புத்தியாய்க் கலவியி லெய்த்திடாப் பரிவொடு தத்தைமார்க் கிதமாடும். பகடிது டுக்கன்வாய்க் கறையனெ ணத்தராப் படியில்ம னித்தர் தூற் றிடலாமோ, குலகிரி பொற்றலாய்க் குரைகடல் வற்றலாய்க் கொடியஅ ரக்கரார்ப் பெழவேதக் குயவனை நெற்றியேற் றவனெதிர் குட்டினாற் குடுமியை நெட்டைபோக் கியவிரா; கலைதலை கெட்டபாய்ச் சமணரை நட்டகூர்க் t கழுநிரை முட்டஏற் றியதாளக்

  • வேதக் குயவன் - பிரமன் - வேதக் குலாலன்" என்றார் 713-ஆம் பாடலில் பிரமனைக் குட்டியது - பாடல் 608 - பக்கம் 406 குறிப்பு.

1. சமணரைக் கழுநிரை முட்ட ஏற்றிய தாளக் கவிதை . "நறுமுறு குரைச் சமணை நிரைகழு நிறுத்தியன. தமிழ் விரகன கவித் தொகையே" - ஆளுடைய பிள்ளை - கலம்பகம் 35 எண்ணாயிரம் சமணர் கழு ஏறினது - பாடல் 332-பக்கம் 334 குறிப்பு