பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 507 (கவிதை) பாடும் பாடல்களும், வெற்றிவேல் ஏந்தும் திருக்கர ե, வற்றாத கருணையும் விளங்கும் பெருமாளே! இணையிலாத பெ s (மனிதர் துாற்றிடலாமோ) 1209. கூந்தல் பாரமும் கலைபட்டு, அருமையான கண் பார்வையும் செந்நிறம் உற்று, நெருங்கிச் சென்று, உடலுடன் சேர்ந்து, அமுதுபோல இனித்து ஊறும் (அதரபானம் நுகர்ந்து வாயிதழ் ஊறலைப்பருகி அனுபவித்து, அறிவு தடுமாற்றத்துடன் பேசி, (அவசமாகவும்) காம மயக்குடன் (புணர்ந்து மடவாரை) மடவாரைப்-பெண்களைப் (புணர்ந்து) கூடிப் (பளகன்) குற்றத்துக்கு ஆளான நான் - (ஆவியும் தளர்ந்து) உயிரும் சோர்வுற்று, கலக்கமுற்ற (ஆகமும்) உடலும் பயங்கொண்டு, பகல் - இரவு என்னும் பிரிவினையும் கவனியாது மறந்து அலைச்சல் உறாமல் - மேலான ஞானத்தை தெளிந்துணர்ந்து, அன்பும் நண்பும் கலந்து மேலெழுந்து, (உன்னைப்) பகருமாறு - போற்றிப் புகழுமாறு செவ்விய உனது திருவடிகளைத் தந்தருள வேணும். துளவ மாலை அணிந்த திருமாலும், சிறப்புடன் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் புகழ்ந்தும், தொழுதும் தேடுதற்கு அரியரான பெரு வீரன் (சிவபிரான்) அருளிய குழந்தையே தேவர்களுக்குத் தலைவனான இந்திரன் பெற்ற லகூர்மீகரம் பொருந்திய தேவசேனையைச் சிறப்புடன் திருமணம் செய்துகூடி விளங்கும்படியான (மோகனம்) கவர்ச்சி மிகப் பெற்ற மயிலை நடத்துபவனே மயில் வாகனனே அல்லது திருமணம்கூடி, விளங்கும்படியான ஆசை மயக்கம் மிக்கிருந்த மயில் அனைய அத்தேவசேனையைப் பாகம் பிரியாதிருப்பவனே! (களபம்) கலவைச் சாந்து பூசின மார்புடன் விளங்கும் குறவர் மாது - வள்ளியுடன் நெருங்கிப் பழகி அவளுடன் "கலவி நாடகம்" புணர்ச்சிக் கூத்துக்களை உடையவனாய் மகிழ்ந்தவனே! == பொல்லாத பாபச் செயல்களை விட்டொழித்து, (உனது) திருவடியை நாள்தோறும் நிரம்பக் கருத்தில் தியானிப்பவர்களுடைய மனத்திற் புகுந்து விளங்கும் பெருமாளே! (செம்பதங்கள் தரவேணும்)