உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 531 (உனது) (கடகம்) கங்கணம் அணிந்த (சயிலம்) மலையன்ன திருப்புயத்தைப் பெறும் படியும் அடையும்படியும், அவுணர்கள் துஞ்ச அசுரர்கள் மடியும் படியும், முன் - முன்பு, கனககிரி) பொன் மலையாம் கிரவுஞ்சம் (சம்பெழுந்து) சம்பு எழுந்து-(பாழ்பட்டு அது இருந்த இடத்தில் சம்புப் புல் எழவும் (அப்படி நிர் மூலமாகவும், (அம்பு ராசி) கடல், (அனல் எழ) தீப்பட்டு வற்றவும் (முனிந்த கோபித்த (சங்க்ரம மதலை போர்க்கு உற்ற பிள்ளை கந்தன் என்று சிவனும் உமையும் (உன்னைப்) புகழ்ந்து (உன் மீது) அன்பு மிக்கிருக்க, சகல பூமியில் உள்ளவர்களும், தேவர்களொடு கூட்டமாய்க் கூடி நின்று (அரி) திருமாலும் பிரமனும் கும்பிடுகின்ற தம்பிரானே. (துன்புகண்டன்புறாதோ) 1220. மாமிசம் மேலே ஏறியுள்ள முடியுள்ள எலும்பு, சீ சீ என வெறுக்கத்தக்க அழுக்குகள் - இவையுடனே நரம்புகள், (பிற அசுத்தங்கள், ஊழ்வினைசம்பந்தமாக நோய்கள் - ಟ್ಲಿ: எல்லாம் அடைந்து (மாசான) குற்றங்களே நெருங்கிச் சேருகின்ற இந்த (ஊனோடு) உடலோடு அலைச்சல் உற்ற இழிவுபட்ட நாயனையவன் - அடியேன்; இப்படிப்பட்ட நான் நான் ஆர் ஒடுங்க ஒடுங்க நான் ஆர் - அடங்கி ஒடுங்குதல் என் வசத்தில் உள்ள சக்தியா (வணங்க நான் ஆர்) வணங்கிப் பணிதல் (என் இச்சையில் உள்ள செயலாறு மகிழ்ந்து உனை ஓத நான் ஆர் மகிழ்ச்சியுடன் உன்னைப் போற் றுதல் என் இச்சையில் உள்ளதா! உயிர்களிடத்தே இரக்கங் கொள்ளுதல் என் இச்சையில் உள்ள தொன்றா (உணங்க நான் ஆர்) சிந்தை வாடி மெலிதல் தான் என் இச்சையா (நானார் நடந்து விழ நானார்) நடத்தல்தான் என் இச்சையா! விழுதல்தான் என் இச்சையா! தானே புணர்ந்து - புணரும் பொருளெல்லாம் தானேயாய், அறிபவனும் தானேயாய், மகிழ்பவனும் தானேயாய் அருள் சுரந்து தாய்போன்ற அன்பைக் காட்டும் தேன் அனைய தேவியுடன் மகிழ்ந்து செழிப்புடன் விளங்கிச் சிவமாய்த் திகழ்பவனும் தானேயாய் - வளர்பவனும் அழியாது இருப்பவனும் தானேயாய் - இங்ங்னம் தன்னந்தனி நின்று ளங்கும் பெருமான் - பூமாலை அணிந்த சடையினராம் எம்பெருமான்-சிவன்அருளிய குழந்தையே