பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 533 சாலோகம், சாமீபம், சாரூபம் என்னும் மூவகையில் உள்ள அடியார்களுக்கும் பெருமாளே! (நானார் ஒடுங்க வணங்க, ஒத விழ) 1221. எமக்கு எதிரானவர் ஒருவரும் இல்லை உலகத்திலேயே என்று (அலகு கூர்மையான) சிலுகு (வர்தப் போருக்கு (விருதிட்டு) கொடி கட்டி (க்ரியைக்கே எழுந்து) அத்தகைய செய்கைக்கே துணிந்தெழுந்து - இப்பூமியின் இடையிலே திரிந்து சுழல்பவர்களான எல்லா வகைய சமயவர்திகளாலும், (கலை எட்டெட்டும் அறுபத்து நான்கு கலைகளாலும் எட்டமுடியாத மந்த்ர வாள் கொண்டு - (விதி வழியின்) பிரமன் எழுதின ஏட்டின்படியே உயிரைக் கவரவரும் கொடியவர்களான யம தர்களை வெட்டித் ன்டப்படுத்தி எனது (ஆண்மை) பத்தி வைராக்யத்தை நிலை நீதிக் கடம்பு - விளாவின் இளந் தளிர் Á*2£ முல்லை, கழுநீர் மணக்கும் பவளநிறமுள்ள (சிவந்த வெட்சி இவை அணிந்துள்ள் திருத்தான்ள வணங்க மாட்டேனோ! (திதி புதல்வரொடு) அசுரர்களொடு சண்டைசெய்து, ரத்த ஆற்றில் முழுகி, விளக்கமுறும் செக்கச் செவேல் என்னும் மிக்க செந்நிறத்துடன் உனது செவ்விய திருக்கரத்தில் பொருந்தி உள்ள வேலை உடையவனே! சிகரங்களை உடைய கிரி - கிரவுஞ்சத்தைப் பொடிபடச் செய்த திருவுருவத்தனே பச்சை நிறத் தோகையையும் அழகையும் உடைய பட்சியாம் மயிலின்மீது ஏறும் எம்பெருமானே!

  • பழமையானவர்கள் பதினொரு விடையர் - பதினொரு (11) உருத்திரர்களும், முடுகிச் செலுத்தப்படும் குதிரைகளைக் (ககனம்) ஆகாயத்தில் நன்கு செலுத்துகின்ற (ஆறிரண்டு தேரர்) பன்னிரண்டு (12) தேர்களை உடைய பன்னிரு சூரியர்களும்,
  • 11 - ருத்ரர், 12 சூரியர்: 2 மருத்துவர். 8 வசுக்கள்: ஆக (11 +12 +2 +8)

முப்பத்து முத்தேவர் - இவர்களை நால் வேறியற்கைப் பதினொரு மூவர்' என்றார் திருமுருகாற்றுப் படையில் ஆதித்தன், உருத்திரன். வசு மருத்துவன் என்னும் ஒரோவோர் பொருள்கள் பலவாகப் பகுக்குங்காற் பன்னிருவர், பதினொருவர். எண்மர், இருவராகப் பகுக்க, நான்கு கூறாய் முப்பத்து மூவராயினார் என்றவாறு, அவர் ஆதித்தர் பன்னிருவரும், உருத்திரர் பதினொருவரும், வசுக்கள் எண்மரும், மருத்துவர் இருவருமாம்" திரு முருகா உரை.