பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/545

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 537 1223. ஏட்டில் (வரை) எழுதப்படுகின்ற (நரஸ்துதிப்) பாடல்களும், சில நீட்டிலே - (அவைதம்முட் சில பாடல்களை நீட்டி இசை பாடுதலும், (இனிது என்று தேடி) பொருள் சம்பாதிப்பதற்கு இனிய வழிகளாம் என்று எண்ணிப் (பிரபுக்களைப்) பொருட் செல்வர்களைத்) தேடிச் சென்று - (ஈட்டும் மாபொருள்) சம்பாதிக்கின்ற பெரும் பொருளைப் பாத்து - பகுத்து பங்கிட்டு (உணாது) உண்ணாமல் (இகல்) ஏற்றமான தகுதி மிக்க குலப் பெருமைகளைப் பேசி, காட்டிலும், பொருந்திய நாட்டிலும், இருந்து பழகும் வீட்டிலும் உலகங்கள் ஏச - உலகில் உள்ளோரின் பழிச் சொல்லுக்கு ஆளாகி - (ஈற்றில்J காக்கையும், நாயும், நரியும், பேய்க் கூட்டங்களும் உண்ணும் படி (இந்த உடல் இறந்து படுதல் என்பது ஒழியாதா நீங்காதா (கோட்டும்) அமையப்பெற்ற (ஆயிர நாட்டன்) ஆயிரம் நாட்டத்தைக் (கண்களைக் கொண்ட) இந்திரனுடைய (நாடு) பொன்னுலகில் (உறை) வசிக்கின்ற (கோட்டு) தந்தங்களை உடையதும், (வால்) வெண்ணிற முடையதுமான (இபம்) யானை ஐராவதம் வளர்த்த (மங்கை) தேவசேனையின் தலைவனே! (கோத்த வேலையில்) (உலகு ஆடையாக) உடுத்துள்ள கடலில் (அல்லது) கவிந்துள்ள கடலில், ஆர்ப்பளித்து நின்ற சூரனோடு சண்டையிட்ட வேலாயுதத்தை ஏந்திய (சிகாவள) மயிலனே' கொங்கு நாட்டுத்தலங்களில் வீற்றிருக்கும் செவ்வேளே! கட்டப்பட்ட (நான்ஏற்றப்பட்ட) பெரிய (சிலை) வில்லை ஏந்திய (கோட்டு வேடுவர்) மலை வேடர்களின் (பூட்கை சேர்) கொள். கையில் சேர்ந்து வளர்ந்த (குறமங்கை) வள்ளியின் (பாகா) பங்கனே! மலர்ந்துள்ள நல்ல பூக்களைச் சாத்தி (உன்) திருவடியைப் போற்றும் தேவர்கள் தம்பிரானே! (யாக்கை மாய்வ தொழிந்திடாதோ) 1224. (கச்சு) ரவிக்கை (பூட்டுகை) இணைக்கப் பட்டதும் (சக்கு ஒடு + அகத்தில்) - சக்கு - (ஆடவர்களின்) கண் - ஒடுகின்ற செல்லுகின்ற (அகம்) இடமாய் விளங்குவ துமான (கோட்டு கிரி ) - கோடு ᎯrfᎸ - சிகரங் கொண்ட மலையன்ன கொங்கை மீதும், (ஆலம்) விஷத்தைக்