பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542 முருகவேள் திருமுறை 17 - திருமுறை கச்சுக் கிழித்ததுணி சுற்றிக் கிடத்தியெரி கத்திக் கொளுத்தி யனைவோரும்: சுட்டுக் குளித்துமனை புக்கிட் டிருப்பரிது சுத்தப் பொயொப்ப துயிர்வாழ்வு. துக்கப் பிறப்பகல மிக்கச் சிவத்ததொரு சொர்க்கப் பதத்தை யருள்வாயே! எட்டுக் குலச்சயில முட்டத் தொளைத்தமரர் எய்ப்புத் தணித்த கதிர்வேலா. எத்திக் குறத்தியிரு முத்தத் தனக்கிரியை யெற்பொற் புயத்தி லனைவோனே: *வட்டக் கடப்பமலர் மட்டுற்ற செச்சைமலர் வைத்துப் பனைத்த மணிமார்பா. f வட்டத் திரைக்கடலில் மட்டித் தெதிர்த்தவரை வெட்டித் துணித்த பெருமாளே (236) 1227. பெண்கள் மீதுள்ள மாயம் ஒழிய தந்த தானன தந்த தானன தந்த தானன தனதான கண்டு போல்மொழி வண்டு சேர்குழல் கண்கள் சேல்மதி முகம்வேய்தோள். கண்டு பாவனை கொண்டு தோள்களி லொண்டு காதலி லிருகோடு, மண்டி மார்பினில் விண்ட தாமென வந்த கூர்முலை மடவார்தம். வஞ்ச மாலதில் நெஞ்சு போய்மடி கின்ற மாயம தொழியாதோ: கொண்ட லார்குழல் கெண்டை போல்விழி கொண்டு கோகில மொழிகூறுங்.

  • வட்டக் கடப்ப மலர் கடப்ப மலர் வட்ட வடிவின து. "மரா

அத்து உருள்பூந் தண்டார்" திருமுரு உருள்பூ - தேருருள் போன்ற வட்டப்பூ" வேறுரை). f இந்த அடியுடன் பாடல் 306. அடி 8 - ஒப்பிடுக.