பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/552

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544 முருகவேள் திருமுறை 17 - திருமுறை கொங்கை யாள்குற மங்கை வாழ்தரு குன்றில் மால்கொடு செலும்வேலா; வெண்டி மாமன மண்டு ஆர்கடல் வெம்ப மேதினி தனில் மீளா. வென்று யாவையு மன்றி வேளையும் வென்று மேவிய பெருமாளே (237) 1228. அருள்பெற தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன தனதான t கப்பரை கைக்கொள வைப்பவர் மைப்பயில் கட்பயி லிட்டிள வளவோரைக். கைக்குள்வ சப்பட பற்கறை யிட்டுமு - கத்தைமி னுக்கிவ ருமுபாயப்; # பப்பர மட்டைகள் பொட்டிடு நெற்றியர் பற்றென வுற்றவொர் தமியேனைப். பத்மப தத்தினில் வைத்தருள் துய்த்திரை பட்டதெ னக்கினி யமையாதோ: Xகுப்பர வப்படு பட்சமி குத்துள

  • முத்தரை யர்க்கொரு மகவாகிக்
  • வேளையும் (மாரன் - காமனையும்) அழகால் வென்றதால் குமாரன்' என முருகவேளுக்குப் பெயர். மாரன் - மன்மதனையும் கு. குற்சிதப் படுத்துபவன். தன் அழகால் இழிவு படுத்துபவன் - "ரத்தின பணா நிருத்தன் மெய்ச்சுதனும் நாடு மிக்க லக்ஷண குமார சுப்ரமணி. யோனே" - திருப்புகழ் 1256. 1 பிச்சைப் பாத்திரத்தை எடுக்கும்படி செய்பவர்கள். கஞ்சுளியுந் தடி யீந்து போ' என்பவர்கள் - என்றார் 767 - ஆம் பாடலில். #பப்பர மட்டைகள் - பாடல் 508 அடி 570 அடி 3, பார்க்க Хз, பரவப் படு = பூமியிலுள்ளோராற் புகழப்படும்; கு = கூ = பூமி,
  • முத்து + அரையர்: முத்தர் + ஐயர் எனப்பிரித்தும் பொருள் காணலாம.