பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/616

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

608 முருகவேள் திருமுறை (7- திருமுறை மாதவன் மாது பூத் பாகர னேக நாட்ட வாசவ சேனா மீட்க மறைநீப. மாமலர் துாவி வாழ்த்த யானையை மாலை சூட் வானவர் சேனை காத்த பெருமாளே 轮 O) 1261. காம மயக்கு அற்று, உணர தான தனந்தன தான தனந்தன தான தனந்தன தனதான பார் நறுங்குழல் சோர நெகிழ்ந்துப டீர தனம்புள கிதமாகப் பாவைய ருந்தியில் மூழ்கி நெடும்பரி தாப முடன்பரி மளவாயின், ஆரமு துண்டனை மீ லிருந்தது ராகம் விளைந்திட விளையாடி ஆக நகம்பட ஆர முயங்கிய ஆசை மறந்துணை யுணர்வேனோ, "நாரத னன்றுச காய மொழிந்திட நாயகி பைம்புன மதுதேடி நாண மழிந்துரு மாறிய வஞ்சக நாடியெ பங்கய பதநோவ; மார சரம்பட fமோக முடன்குற வாணர் குறிஞ்சியின் மிசையேபோய். மாமுநி வன்புணர் மானுத வுந்தனி மானை மணஞ்செய்த பெருமாளே (271)

  • வள்ளிமலையில் வள்ளியின் அழகைக் கண்ட நாரதர் என்னை ஆளுடை அறுமுகன் துணைவியாயிருப்ப முன்னர் மாதவம்புரிந்தவர் இவரென" உணர்ந்துஉடனே தணிகை மலைக்குச் சென்று முருகனை வணங்கி - வள்ளியைக் கண்ட விவரத்தைக்கூறி, மோன நற்றவ முனிவன் தன் மகள் மானின் உற்றுளாள் வள்ளி வெற்பினில். கானவக் குலக்கன்னியாகியே, ஏனலைப் புரந்திதணில் மேவினாள்:'நினக்கு நேரழகுள்ளவரில் அவள், தனக்கு நேரழகுள்ளவர் தாமிலை என்றெலாம் கூறி முருகவேள் வள்ளியை நாடிச் செல்லும்படி செய்தனர். முருகனும் அங்ங்னமே சென்று அவளிடம் வேட்கை புகன்றும் அகன்றும் வருந்தியும் வாழ்த்தியும் மாயைகள் செய்து முந்தை உணர்ச்சியை முற்றுற நல்கித், தந்தையுடன் தமர் தந்திட அவளை மணஞ் செய்துகொண்டனர் - என்பது கந்தபுராண வரலாறு f வாரமுடன்' என்றும் பாடம்