பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/653

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 645 வேதனையில் நோய்தரும் தொந்தரவில் (நாட்டமாகி) கண் கொண்டவனாய் - கவனம் வைத்தவனாப், இடர் பாட்டில் - துன்ப நிகழ்ச்சிகளில் விழுவதான மயல் - காம மோகம் (தீட்டி) கூராகி மிக்குத் திரியாமல் ஆணி உள வீட்டை - ஆதாரமாயுள்ள வீட்டை, மேவி விரும்பி, உளம் - உள்ளம் - மனது (மாட்டை) - மாடு ஐ - பொன்னை ஆசையுடனே சேகரித்து இங்கனம் பொழுதைப் போக்கி அழியாமல் - உயிர் வாசம் செய்யும் கூடாகிய இந்த உடலில் ஞானமறைப் பொருள்களை (ஊட்டி) உபதேசித்து, ஆன - நன்மை தருவதான நிலைமையைக் காட்டி யருள்வாயாக கேணி உற கிணறு போல (மிக ஆழமாக) - வேட்ட விரும்பப்பட்டதான ஞான மார்க்கத்தை (வேட்டர்) விரும்பினவர்கள் கேள் - விசாரணை செய்கின்ற - ஆய்கின்ற, சுருதி நாட்டில் - வேதத்து - இடத்தே - வேத மொழியிடத்தே உறைபவனே! கீத இசையுடன் வேதமொழி போன்ற திருமுருகாற்றுப்படை என்னும் தமிழ்மாலையைச் சூட்டின (கிரர்) நக்கீரருடைய இயற்றமிழைக் கேட்டருளின கிருபா மூர்த்தியாம் செவ்வேளே! ஆகாயம் வரை உயர்ந்துள்ள வள்ளிமலைக் காட்டில் வாழ்ந்திருந்த வேடப்பெண் வள்ளியின் சிதம் - குளிர்ந்த இரண்டு மலையன்ன கொங்கையில் அணைபவனே! கோபிக்கும் குணத்தராம் அவுணர்களுடைய பிரதேசத்தில் நிரம்பத் தீயை மூட்டித் தேவர்களின் சிறையை நீக்கின - அல்லது தேவர்களைச் சிறையினின்றும் மீள்வித்த பெருமாளே! (ஞானமறை யூட்டி ..... அருள்வாயே) 1279. வேலாயுதத்தையும், வாளையும், கொடிதான ஆலகால விஷத்தையும், (மதன்) (மன்மதன்) செலுத்துகின்ற பானங்களையும், ஒப்பாகச் சொல்லக் கூடிய - (வேதை) துன்பந்தருவதைச் (சாதித்த) நிலைநாட்டுகின்ற கண்களை உடைய மாதர்களுடன், ஆபத்தில் - ஆபத்தான லீலைகளில் விளையாடி, மோகித்து - மோகம் - ஆசை கொண்டு, இரியும் - (அதனால்) நிலைகெடுகின்றதான (வெகுருப) பல உருவத்ததான பலவகையதான