பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/687

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை ומו( கொந்து - திரளான ஜனங்கள் - பக்தர்கூட்டங்கள் உலவுகின்ற ராமேசுரம், ஒப்பற்றநிலையில் வந்து பூஜை செய்கின்ற நான்கு வேதங்களும் வல்ல (தந்திரர்) கல்வியாளரின் கூட்டம் கூடியுள்ள (வேளுர்) புள்ளிருக்குவேளுர் - வைத்தீசுரன் கோயில், திருப்பரங்குன்றம் எனப்படும் தலங்களில் வீற்றிருக்கும் செல்வமே' 5. மாயூரம்:- இது மாயவரம் என வழங்கும் பார்வதி மயில் உருவுடன் சிவபிரானைப் பூசித்த திருப்பதி, இமயச் செல்வி மஞ்ஞையாய் வழிபட் டேத்தும் இது துலாப் பொன்னித் தானம் திருவிளை. அருச்சனை. 19; திருப்புகழ் 792 பக்கம் 348 தலக்குறிப்பைப் பார்க்க 6. அம்பெறு சிவகாசி - இது காசித்தலம் எனக்கொண்டால் அம்' ஜலம் - கங்கையைக் குறிக்கும். சிவம் - மங்கலத்தைக் குறிக்கும் - காசி - இறந்தால் முத்தியளிக்கும் தலம் திருப்புகழ் 635 பக்கம் 2தலக்குறிப்பைப் பார்க்க சிவகாசி என்றே ஒருதலம் தெற்கே பாண்டிநாட்டில் உள்ளது. 7. கொந்து உலாவிய ராமேசுரம் - கொந்து - திரள் இங்கு பக்தர் திரளைக் குறிக்கும் - பூiராமர் பூசித்ததலம் - திருப்புகழ் 987 பக்கம் 852 ■ தலக்குறிப்பைப் பார்க்க 8. வேளுர்:- இது புள்ளிருக்கு வேளுர் எனப்படும் வைத்திசுரன் கோயில் - திருப்புகழ் 783 பக்கம் 324 தலக் குறிப்பைப் பார்க்க 9. பரங்கிரி: - திருப்பரங்குன்றம் - ஆறு படைவீடுகளில் முதலாவது திருப்புகழ். 2-பக்கம் 22 தலக்குறிப்பு