பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/701

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப் புகழும் சிவனும் 693 பாடி முருகவேளைத் துதித்தார். இங்ங்ணம் பத்தினிப் பெண்போலத் தமது நாயகராம் முருகவேளின் உத்தரவைப் பெற்றபின் 'கைத்தல நிறைகனி, உம்பர் தரு' என்னும் பாடல்களைப் பாடப், பொய்யாக் கணபதியார் மிக மகிழ்ந்து அருணகிரியாரின் கனவில் தோன்றி, "அன்ப நீ பாடும் திருப்புகழ்ப்பாக்களில் முருகவேளின் மயில், கடம்பு, வேற்படை, சேவற் கொடி, திருவடி, பன்னிருதோள், வயலூர் இவைகளை வைத்துப் பாடுவாயாக" எனக் கூறி மறைந்தார். அருணகிரியார் மகிழ்ந்தார்; விழித்தெழுந்தார்; ஆடினார்; வித்தக மருப்புடைய பெருமாளே.... உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பென எனக்கருள்கை மறவேனே" என நன்றி பாராட்டும், "பக்கரை விசித்ரமணி" என்னும் திருப்பாடலைப் பாடினார். இங்ங்ணம் தமக்கு அருள்பாலித்த பொய்யாக் கணபதியாரை அருளிற்சீர் பொய்யாதகணபதி எனப் பாராட்டி, அருளிற் சீர் பொயாத கணபதி..... வாழும் வயலியில் "அருளிற் சீர் பெnயாத கணபதி. வாழும் வயலியில் அழகுக் கோயில் மீது மருவிய பெருமாளே." (910) எனத் தமது ஆண்டவரைப் போற்றி மகிழ்ந்தார். இதன் விரிவை யான் எழுதிய அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும்" என்னும் நூலிற் காணலாம். மேற் சொன்ன விஷயங்கள் அடங்கிய முக்கியமான பாடல். களின் எண்: 168,456,495,551,960,986, 1005, 10:19, 1098,1240, 1244 2. திருப்புகழும் சிவனும் இனி, அருணகிரியார் சிவபிரானைப்பற்றி உரைத்துள்ள விஷயங்களை ஆராய்வோம். 1. சிவனது உருவமும் நிறமும் எரியின் மேனி, செம்பொன், மேனி, பாதி சிவப்பு - பாதி பச்சை 2. சிவபிரான் குடும் மலர்கள் முதலிய அறுகு ஆத்தி, (ஊ)மத்தம் (வெள்) எருக்கு கரந்தை கழுநீர், குரா, குருந்து கொன்றை, குதம், செம்பை, தாமரை, தும்பை, துழாய், நொச்சி, பாதிரி, பிச்சி, பூளை, மாதுளம்பூ வன்னி, வில்வம்