பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/704

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

696 திருப்புகழும் தெய்வங்களும் (சிவன்) விளக்கியுள்ளார். உதாரணமாக ஒரு சில காட்டுவாம் 1. குமுதபதி வகிரமுது சிந்தச் சிந்தச் சரணபரி புரசுருதி கொஞ்சக் கொஞ்சக் குடிலசடை பவுரிகொடு தொங்கப் பங்கிற் கொடியாடக் குலதடினி அசைய இசை பொங்கப் பொங்கக் கழலதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத் தொகுதிதோ தொகுகுகுகு தொகுகுகுகுதொங்கத் தொங்கத் திமிதமென முழவொலிமு ழங்கச் செங்கைத் தமருகமததிர்சதியொ டன்பர்க் கின்பத் திற முதவு பரதகுரு" (திருப்புகழ் 17) 2. தொந்தந் தொந்தந் தொந்தந் தென் றொலிபட நடமிடு பரன்!" ( III 115) 3. செகக்கச் செகக்க செக்க தளிக்கத் தளிக்க தக்க திமித்தித் திமித்தி தித்தி யென ஆடும் செகத்துக் கொருத்தா ( " 243) 4. தனதாந்தன தான தனந்தன தெனதோங்கிட தோன துனங்கிட தனவாம்பர மான நடம் பயில் எம்பிரானார்" ( HH 724) 5. " செகசெச் சேசெச் செகவென முரசொலி திகழச் சூழத் திருநடமிடுபவர்" ( " 893) 6. தொந்திதிமி தோதி தந்திதிமி தாதி என்றுநட மாடு மவர்" ( H 942) 7. "திக்குக்குத் திக்குத் திகுதிகு டுட்டுட்டுட் டுட்டுட் டுடுடுடு தித்தித்தித் தித்தித் திதியென நடமாடும் சித்தர்" ( * 1194) திருவாலங்காட்டில் காளியுடன் நடமாடினதும், சுடலையில் நடமாடுவதும், முயலகனை மிதித்து நடமாடுவதும் கூறப்பட்டுள பொன்னம்பலத்திற் செய்யும் நடனத் திருகோலத்தின் ரகசிய இலக்கணத்தையும், "அகரமாதி யாமகூடிரங்கள் அவனி கால் விணாரப்பொ டங்கி அடைய வேக ரூபத்தி லொன்றி முதலாகி அமரர் காணவே யத்தமன்றில் அரிவை பாட ஆடிக் கலந்த அமல நாதனார்" - (திருப்புகழ் 966) எனவரும் அடிகளில் விளக்கியுள்ளார். (அவனி - பூமி, கால் - காற்று, விண், அப்பு-நீர், அங்கி - தீ. பஞ்சபூதங்கள்: