பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/709

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழும் பார்வதியும் 701 9. தேவியின் துதி: தேவியின் பெருமைகளை அடுக்கடுக்காகச் சுவைபெறக் கூறித்துதிக்கும் துதிமொழிகளைக் காண வேண்டுபவர் தேவேந்திர சங்க வகுப்பையும், சீர்பாத வகுப்பு, வேல் வாங்கு வகுப்பு இவைகளின் ஈற்றடிகளையும், பூத வேதாள வகுப்பின் முதலடியையும் படித்து மகிழ்வுறலாம் திருப்புகழில் வந்துள்ள துதி நயப்பாகங்களில் வடசொலும் தமிழ்ச்சொலும் துள்ளித் ததும்பச் சந்த இன்பம் பொழிந்து மலியும் ஒரு சில உதாரணங்களைக் காட்டுவாம். 464. குலசயி லத்துப் பிறந்த பெண்கொடி உலகடையப் பெற்ற உந்தி அந்தணி குறைவற முப்பத் திரண்டறம்புரி கின்றபேதை குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்களி கனபண ரத்தப் புயங்க கிங்கணி குவடு குனித்துப் புரஞ் சுடுஞ்சின வஞ்சிநீலி கலப விசித்ரச் சிகண்ட சுந்தளி கடிய விடத்தைப் பொதிந்த கந்தளி கருணை விழிக் கற்பகத் திகம்பளி எங்களாயி கருதிய பக்தர்க் கிரங்கும் அம்பிகை சுருதி துதிக்கப் படுத்த்ரி யம்பகி - கவுரி, 526. குமரி காளி வராகி மகேசரி, கவுரி மோடி கராரி நிராபரி கொடிய சூலி சுடாரணி யாமளி மகமாயி குறளு ரூப முராரி சகோதரி, உலக தாளி உதாரி பராபரி குரு பராளி விகாரி நமோகளி அபிராமி சமர நீலி புராரி தணாயகி, மலைகுமாரி கபாலி நனாரணி சலில மாரி சிவrய மனோகரி பரையோகி சவுரி விரி முநீர்விட போஜனி, திகிரி மேவு கையாளி செயாளொரு சகல வேதமுமாயின தாயுமை 1133. படிமுழுதுங் காத்த மால் குலத்தி முதுமறையின் பேச்சி நூலிடைச்சி பகிர் மதியம் பூத்ததாழ் சடைச்சி யிருநாழி படிகொடறங் காத்த மாபரைச்சி பலகலையும் போற்று வேல்விழிச்சி நெடுநீலி சமரமுகங் காட்டு மால் விடைச்சி அகலிட முண்டார்க்கு நேர் கடைச்சி.