பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/710

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

702 திருப்புகழும் தெய்வங்களும் (திருமால்) மேற்காட்டிய துதிகளில் எத்தகைய சந்த மாயிருந்தாலும் சொற்கோவையும் பொருட்கோவையும் எவ்வளவு அழகுபட அமைந்துள்ளன. பாருங்கள்! இது அன்றோ "வாக்கு" என்னே முருகன் திருவருட் ப்ரசாதம் இருந்தவாறு - பார்வதியைப் பற்றிய விஷயங்கள் அடங்கிய முக்கியமான பாடல்களின் எண்: 137, 221, 303, 337, 434, 455, 457, 464, 526, 640,644,648,653, 812, 898, 920, 997, 1001, 1129, 1133, 1136, 1213. 4. திருப்புகழும் திருமாலும் திருப்புகழின் வாயிலாக முதலிற் கணபதியைக் கண்டோம்: பின்னர், சிவனையும் பார்வதியையும் கண்டோம்; இப்போது ಶ್ಗ மூலமாகத் திருமாலைக் காண்போம். திருமாலுக்கே த்தான் நாலாயிரப் பிரபந்தமாதிய நூல்களிற் காணமுடியாத அடுக்கடுக்கான துதிகளைத் திருப்புகழிற் கண்டு திருமாலடியவர்கள் அகங் களிகொள்வர். ణ్డు திருமால் மருகன் என நினைப்பதே அருணகிரியார்க்கு ஓர் ஆனந்தம்; திருமாலின் பெருமையைக் கூறப்புகுந்தவர் அவருடைய பல அவதாரங்களில் நடைபெற்ற அருஞ்செயல்களைப் பாராட்டி மகிழ்வர் கண்ணபிரான் இயற்றிய பல லீலைகளையும், பாரத யுத்தத்தில் அவர் ஈடுபட்டு உதவிய செயல்களையும் பாராட்டுவர்; பூரீராம மூர்த்தியாய் TITഖഞ്ഞ് சம்ஹாரம் செய்த பராக்ரமத்தைப் பாடிக் களி கொள்வர். இங்ங்ணம் திருமாலைக் குறித்த பல அரிய விஷயங்களைத் தமது இனிய சந்தப்பாக்களில் நவரத்னங்களை எடுத்து இழைப்பதுபோல ஆங்காங்கு புகட்டிப் புகழ்வார் அருணகிரியார் முதலாவதாக மூல புருஷராகிய திருமாலைப்பற்றி அருணகிரியார் சொல்லியுள்ள விஷயங்கள் இவை.இவை எனக் கூறிப் பின்னர்த் திருமாலின் அவதார விசேடங்களில் இய்ற்றப்பட்ட லீலைகளை எடுத்துக் குறிப்போம். 1. திருமாலின் லீலைகள், அவரைப்பற்றிய செய்திகள். திருமால் முல்லை நிலத்துக் கடவுள்; காத்தற்றொழிலைப் புரியுங் கடவுள். சர்வான்மாக்களும் கலக்கமற்றுச் சுகமுறத்தாம் அனந்தல் - துயில் கொள்பவர் - திருமங்கையின் கணவர்; தெய்விக பொன் ஆழியாகிய சக்கரத்தையும், "புனித சங்கத்'தையும் திருக்கரத் திற் கொன்டவர். சங்கு சக்கரம், கதை, வாள், வில் என்னும் ஐந்து