பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/712

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

704 திருப்புகழும் தெய்வங்களும் (திருமால்) தேவர்களது பசிதீரப் பகிர்ந்தளித்தார்; கடைந்தபோது நோவுற்றன அரவும், மதியும், திருமாலின் ஆயிரந்தோள்களும், கடைந்தபோது எழுந்தன லகூழ்மி, பாரிஜாதம் முதலிய படும் சித்தி ப் பொருள்கள். (2) கஜேந்திர மோகூதம் தாமரை மடுவில் முதலையின் வாயிற் சிக்குண்ட யானை பொருமி ஆவி சோர்ந்து திகைத்து, 'ஆதிமூலமே சரணம்" என்னை ஆண்டருள்" என ஒலமிட்டு அழைத்தது; ஹா நாராயணா! நற்றுணைவா! லகூழ்மீகாந்தா துழாய் மார்பா கோபாலா காவாய்! காவாய்' எனக் கதறி அழைத்தது அழைத்த ஒரு நொடிக்குள் பெருமாள் அன்புடன் கருடன் மீதேறி வந்தனர்; தமது பொற் சங்கத்தை ஊதிக்கொண்டு ஆகாய மார்க்கமாக விரைவில், சங்க நாதம் அடங்கு முன்னரே, அஞ்சற்க எனக்கூறி வந்தனர்; சக்கரங் கொண்டு முதலையின் தலையைச் சின்னாபின்னமாகக் கிழித்தனர். அதுகண்டு மண்ணும் விண்ணும் பெருமாளைப் பரவியேத்தின. (1062, 1187) இனித் திருமாலின் அவதாரங்களில் இயற்றப்பட்ட லீலைகளை எடுத்துக் கூறுவோம் அவதாரங்களுள் கயல் (மீன்), ஆமை (கூர்மம்), கோலம் (பன்றி, வராகம்), அரி (நரசிங்கம்), குறள் (வாமனர்) என்னும் ஐந்து அவதாரங்கள் - 'ஆமை கய லெனச் செயங்கொள் கோல குற ளரித் தடங்கை யான அரவணைச் சயந்தன் மருகோனே! (1271) எனவரும் ஒரடியிற் கூறப்பட்டுள; மற்றைய ஐந்து அவதாரங்களுள் ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் சம்பந்தமான லீலைகள் திருப்புகழிற் பரக்கக் கூறப்பட்டுள. அவதாரங்களுள் - 1. மச்சாவதாரம் (மீன்): இந்த அவதாரத்தில் திருமால் மீனுரு எடுத்து வேதங்களை மீட்ட சரித்திரம் கூறப்பட்டுளது: "சிறுத்த செலு அதனுளிருந்து பெருத்த திரை உததி கரந்து செறித்த மறை கொணர நிவந்த ஜெயமால்" (திருப். 245) "ஆரணற்கு மறை தேடியிட்ட திருமால்" (திருப். 580) 2. வராகாவதாரம் (பன்றி உரு): பூமியைப் பாப்போற் சுருட்டி யெடுத்துப் பாதாளத்திற் சென்றொளித்த அசுரனைத் திருமால் பன்றி உரு எடுத்துச் சென்று