பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/713

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழும் திருமா லும் 705 கொன்று, பூமியை மீட்டுவந்து பழம்படியே வைத்ததும், அப்பன்றியே கர்வங்கொண்டு அண்டங்களைக் கலக்க முருகவேள் அதனுடன் போர் செய்து அதை அடக்கியதும் கூறப்பட்டுள. 'குகரத்தொ டம்பு தானெடுத்து வந்த சூதன்" (திருப். 229) (குகரம் பன்றி அம் பூ அழகிய பூமி) "ஏனபதி தனை கோலக்காலமாக அமர்செய்த வடிவேலா" (திருப். 503) (ஏனபதி - ஆதிவராகம்) சிவபிரானது திருவடியைத் தேடப் பூமியைத் தோண்டிச் சென்றபோதும் திருமால் பன்றி உரு எடுத்தார். பெரு நிலஞ் சூகர மாய்க்கின்றான்" (கந் அலங்), கோல வுருவ்ர் யெழுந்துப்ாரத்ன்ையே இடந்து" (திருப். 726) 3. நரசிம்மாவதாரம்: "ஒம் இரணிய ரூபா நமோ" எனச் சுக்ராசாரியராம் ஆசான் எடுத்துரைத்க அவன் குலை நடுங்கும்படித் தவநெறியில், சத்திய நெறியில் நின்ற பாலன் பிரகலாதன் "நம நாராயணாய" எனக் கூறி னதும், அங்ங்னம் கூறக் கேட்ட இரணியன் கோபங் கொண்டதும். "உன் இறைவன் எதனில் உளன், இத் துாணில் உளனோ" எனத் ஆானை இரணியன் அறைந்ததும், அறைந்த வுடன் தூணிலிருந்து திருமால் இரண்டு உருவான நரசிங்க உருவத்துடன் வெளித்தோன்றி இரணியன் கதற அவன் மார்பை நக்த்தாற். பீறி, உடல்ை இருபிளவாய் வகிர்ந்து, அவன் உயிரையும் ரத்தத்தையும் உறிஞ்சி, சிமாலையுடன் அவன் பசுங்குடலையும் தோள்மாலைய்ாக அணிந்து வெற்றிகொண்டதுமான விவரங்கள் கூறப்பட்டுள. (திருப். 874, 11:37, 1153 முதலிய) 4. வாமனாவதாரம் - திருவிக்ரம சொரூபம் . மாவலிச் சக்ரவர்த்தியின் முன் திருமால் வாமன முநிவராகக் (குறள் ரூபத்தினராகச் சென்று மூவடி மன் கேட்டுப் பின் உலகளந்த மூர்த்தியாக நீண்ட உருவைக் கொண்டு மூதண்ட கூட முகடு முட்ட ஒரு சேவடியை நீட்டினதும், மண் ஒரடியில் அளவிட்டதும், மாவலியின் உச்சியில் ஒரு ருவடியை வைத்து அவனைச் சிறையிட்டதும், சுக்ராசாரியின் கனன்னைக் கெடுத்ததும் கூறப்பட்டுள (திருப். 268,643, 845, 1201,125 கந்-அலங் 15 முதலிய)