பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/716

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

708 திருப்புகழும் தெய்வங்களும் (முருகர்) 'மத சிகளி கதறி முது முதலைகவர் தர நெடிய மடு நடுவில் வெருவி யொரு விசை ஆதிமூல மென வருகருணை வரதன் (1), இகல் இரணியனை துதியுகிளின் வகிரும் அடல்அரி (2), வடிவு குறளாகி மாபலியை வலிய சிறை யிடவெளியின் முகடு கிழி படமுடிய வளரு முகில் (3). நிருபன் இருப துவாகு பூதரமும் மகுடம் ஒரு பதும் முறிய அடுபகழி விடுகுரிசில் (4)." பின்னர், பலராமர் அவதாரத்தைச் சீரம் (கலப்பை) செங்கை கொண்ட சீரங்கர் எனக் கந்தரந்தாதி 98ஆம் பாடலிலும், 1273 ஆம் திருப்புகழில் மற்போர் செய்து எனவரும் வரலாற்றில் அடங்கள்ம், கற்கி அவதாரத்தை 736ஆம் பாடலில் -துரகத நரபதி எனக் குறிப்பாற் கூறியும் உள்ளார். இங்ங்ணம் திருமாலின் பல பராக்ரமங்களையும் அவதார ഖ്லைகளையும் கூறி அத்தகைய பெருமானுக்கு உகந்த மருதோனே - எனத் தமது குருநாதராம் குழந்தைக் குமரனைப் போற்றிப் போற்றி மகிழ்வர் அருணகிரியார். திருமாலைக் குறிக்கும் முக்கிய பாடல்களின் எண்: 122, 132, 458, 509,808, 874,956, 1004, 1009, 1012, 1062, 1082, 1137, 1153, 1187, 1203, 1207. 5. திருப்புகழும் முருகரும் இனி, திருப்புகழுக்கு மூல மூர்த்தியாய் விளங்கும் முருகவேளைப் பற்றி அருணகிரியார் கூறுவதையும் கவனிப்போம் தம்மை ஆட்கொண்டருளிய மூர்த்தி முருகவேளேயாதலின், அவரது திருவடித் தியானம் மனத்தின்ரில் நழுவாதிருக்க வேண்டுமென்பதே முதல் முதல் அருணகிரியார் விரும்பி வேண்டுவது. அவ்வேண்டு. கோளை அவர் முருகரிடம் முறையிடும் வழியும், தமது விருப்பம் நிறைவேறுவதற்கு அவர் செய்யும் அறிவு நிறை தொண்டும் மிகவும் பாராட்டத்தக்கன. நினைத்த காரியம் நிறைவேறுதலில் இடையூறு ஒன்றும் வாராதிருக்க விநாயகமூர்த்தியின் திருவருள்தான்ே வேண்டும். ஆதலால், முருகவேளை நாயகராகக் கொண்ட அருணகிரியார் முருகவேளை நோக்கி.