பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/725

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழும் தேவசேனையும் 717 சரணமெப் பொழுதுநட் பொடுநினைத் திட அருட் டருவாயே" (672) (2) எனது யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும் ■ இதய பாவனாதீதம் அருள்வாயே (1048) (3) மனதாலே இறந்திட்டுப் பெறவே கதியாயினும் இருந்திட்டுப் பெறவே மதியாயினும் இரண்டிற் றக்கதொ ரூதியம் நீதர இசைவாயே. (631) (4) இறைவா எதுதா அதுதா (834) (5) மாப்பாதகனாம் அடியேனை நினருளாலே பார்ப்பாயலையோ அடியாரொடு சேர்ப்பாயலையோ உனதாரருள் கூர்ப்பாயலையோ உமையாள்தரு குமரேசா! (685) (19) முருகன் பெருமை: (1) சிலைமகள் நாயன் கலைமகள் நாயன் திருமகள் நாயன் தொழும்வேலா! (261) (2) கஞ்சம் வாய்த்திட் டவர்க்குங் கூட்டிக் கன்று மேய்த்திட் டவர்க்குங் கூற்றைக் கன்ற மாய்த்திட் டவர்க்குந் தோற்றக் கிடையாமீ (373) (20) முடிவு: முருகா எனவோர் தரமோ தடியார் முடிமே லிணைதாள் அருள்வோனே! ஒருகால் முருகா பரமா குமரா உயிர்கா எனவோ தருள் தாராய். (851) முருகவேளைப் பற்றிய விஷயங்கள் கூறும் முக்கியமான பாடல்களின் என்: 117, 185, 451, 452, 454, 457, 509, 513, 766, 777, 803,838,880, 987, 1256. 6. திருப்புகழும் தேவசேனையும் இனித் தேவசேனையைப் பற்றி அருணகிரிநாதர் கூறியுள்ள அரிய பொருள்களை :: வள்ளியம்மையைப் போற்றின அளவில் அதிக இடங்களில் தேவசேனையைப் பற்றிக் கூறாவிடினும் தேவசேனையைப் பற்றிப் பல அரிய பொருள்களை அருணகிரியார் வெளியிடுகின்றார். அவை தாம். (1) தேவசேனை "முத்தி (தரு மாது" என்பது ஒர் அரிய பொருள். இது "முத்தித்தரு பத்தித் திருநகை அத்தி" என ஆண்டவரே எடுத்துக் கொடுத்த முதல் திருப்புகழாலும், "அமுதத் தெய்விானை திரு