பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/726

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

718 திருப்புகழும் தெய்வங்களும் (தேவசேனை) திமாதின் மணவாளா" = என்னும் திருமுட்டத்துத் ¥: (764) விளக்கம் உறுகின்றது." ய கேவலி குடில் மங்கை" எனவரும் திருநாமங்களும் ஈண்டு உணரற்பாலன. (2) தேவசேனை முதலில் அமுதவல்லி என்னும் பெயரினள் என்பதை உணர்த்த "அமுதத் தெய்வானை" (764), "அமுத மாது" (7.88) எனப் போற்றப்பட்டுள்ளாள். (3) தேவசேனை தேவர்கோன் மகளாதலின் அந்த அம்மைக்கு உரியன இடி, குலிசம், ஐராவதம், பொன்னுலகம் - என்னும் நான்கும். இதை "இடியு முனை மலி குலிசமும் இலகிடு கவள தவள விகடதட கணகட இபமும் *இரணிய தரணியும் உடையதொர் தனியானை" - (1008) என வருவதால் அறிகின்றோம். (4) தேவர்கள் வாழ்வதற்கு முருகவேள் மூலகாரணர்: தேவசேனை யம்மையார் துணைக் காரணம் என்பது "சுரர் வாழப் பிறந்த சுந்தரி" (1192) என்றதனால் விளக்கப்படுகின்றது. (5) தேவசேனை யிடத்து முருகவேளுக்கு மிக்க காதல் உண்டு என்பது 'யானை அறவிற் றுவளும் ஆசைக்காரன்" - (வேளைக்காரன் வகுப்பு) தத்தத்து அத்தி தத்தை தாத (கந் அந் 54) அத்தி நகை இன் நித்திலம் உந்து அயில் அமுதத்தால் உருகிய சித்த" - (கந், அந் 62) 'உம்பற் றருமகள் சுகிப்ப, மண அறை களிக்க துணை அறு முகத்தொ டுறமயல் செழித்த திருபுய செம்பொற் கரகமலம் பத்திரு தலம்" -(585) என வியந்துரைப்பதால் அறியக்கிடக்கின்றது. (6) வள்ளியம்மை யிடத்தும் தேவசேனை யிடத்தும் "என் ஆவியை ஆண்டருளுமின்" என வேண்டும் நிலையில் முருகவேள் காதல்கொண்டிருந்தனர் என்பது - உந்தி மிர்! அத்திமிர்! அத்தனை ஆவி ஆளும் என் சேவகனே! -(கந். அந் 7) -என்னும் அருமை வாக்கால் விளக்கப்படுகின்றது. "இரணிய தரணி - பொன் உலகு