பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/728

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

720 திருப்புகழும் தெய்வங்களும் (வள்ளி) அக்கமொரு கோடிபெறு வஜ்ரபாணிக்குமரி தக்க அமராவதி புரக்கும் ஆனை (க்குஇறைவன்) - (பூதவேதாள வகுப்பு) இனி வள்ளியை பற்றி ஆய்வோம். 7. திருப்புகழும் வள்ளியும் வள் ளியம் I): (i) (1) திருமாலின் மகள்: "திருமால் அளித்தருளும் ஒரு ஞான பத்தினி"1218 (2) திரு (இலக்குமி)யின் மகள்: திருமகள்' -112, 238, 24 (3) பிரமன் தங்கை விதியானவன் இளையாள் (1185) (4) சுந்தரவல்லி (பழைய பெயர்)"சுந்தர குறம் பெண் (65) (5) அமுதவல்லியின் (தேவசேனையின்) தோழி: அமுத மாதுவின் நல் தோழிமாது' (788) (6) சிவமுனிவர் மகள்: முனிபெறு புனமான் (513) (7) மான் ஈன்ற மகள்: மான் ஈனும் அரிவை (1053) (8) வேடர் குலத்து விநோத மகள்: "வியாதர்கள் விநோத மகள்" (352) (i) வர்ணனை: (ii) (iii) குயில்மொழிக் கயல்விழித் துகிரிதழ்ச் சிலைநுதற் சசிமுகத் திளநகைக் கனகுழற் றனகிரிக் கொடியிடைப் பிடிநடைக் குறமகட்டிரு (672) கொச்சை மொழிச்சி கறுத்த விழிச்சி சிறுத்த இடைச்சி பெருத்த தனத்தி குறத்தி (128) நிறம்: பச்சை நிறம் -பச்சைக் கொச்சைக் குறவி (476) அழகு: எழுதிட அரிய எழில் (1080), மடலூடே எழுத அரியவள் (199); கவர்பூ வடிவாள் 563 ஆகத்தின் ஆழகு முகத்தில் தெரியும் என்பதற்கு ஏற்ப அறுமுகவேள் வள்ளியைத் தனது அகத்திற் கொண்டிருந்தாராதலின் தாமரை என்கின்றார் அருணகிரியார். "தெய்வவள்ளிசே அகம் அன்ன வதனாம்புய! (கந் அந் 64)