பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/732

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

724 திருப்புகழும் தெய்வங்களும் (வள்ளி) (9) ിതങ്ങliബ காக்கும் தொழிலைப் புதிதாகக் கற்றுக் கொண்டு நாள்தோறும் (வள்ளிக்கு உதவியாகக்) குயில், கிளி வராது தினை காத்தது. நாடொறும் மயில் பயில் குயில் கிளி வம்பிலே கடி தொண்டினோனே' 768 (வம்பு . புதுமை) "தினைகாவல் கொண்ட முருகா" 902 (10) வள்ளியைக் கன் காட்டி வேட்டது. குன்ற வேட்டிச்சியைக் கண் காட்டிக் கொண்டு வேட்டு (373) (11) வள்ளியைத் தோளின் மேல் வைத்து ஒளித்தோடினது: குறமானைத் தோளில் உறவாகக் கொண்ட வாழ்வே' 524 வேடுவர் மாதாம் ஓர்மினை எடுத்தே தான்விர 71.4 'உரத்தோ ளிடத்திற் குறத்தேனை வைத்திட் டொளித்தோடும் வெற்றிக் குமரேசா 534 இம்மட்டோ இன்னும் கூறுகின்றார் அருணகிரியார்: (1) முருகா நீ தேவர்தம் பெருமாள்; ஆதி நாதராம் சிவனும் (உனது தண்டைக் கழலைப் பேணித் தொழுது நிற்கின்ற தேசிக மூர்த்தி நீ அங்ங்ணமிருந்தும், நீ வள்ளியின் பாதத்தை உன் தலைக்கு யாகக் கெண்டுள்ளாய் - என்கிறார். "புனமேவும். வஞ்சி. பாதம் படுஞ் சேகரா! தண்டையங் கழல்பேணி. ஆதிநாதன் தொழும் தேசிகா உம்பர்தம் பெருமாளே! (1107) (2) முருகா வானவர் பெருமாளாய்த் தேவர்களுக்கெல்லாம் தஞ்சம் அளிக்கின்றவன் நீ அங்ங்ணமிருந்தும் நீ வள்ளிபால் மால்கொண்டவனாய் அவளிடம் சென்று எனக்கு உன்னை ஒழிய வேறு தஞ்சம் இல்லை என்று கூறி அவளிடம் காத்து நின்றன்ையே என்கின்றார். திண்புன மீதே மாதொடு மிகமாலாய் - மேகமென் குழலாய்: நீகேள் இனி வேளை கொண்ட பிரானே வானவர் பெருமாளே (1000) பின்னும், தான் வழியடிமை என்று வள்ளிக்கு அடிமைச் சீட்டு முருகவேள் எ க்கொடுத்த ஒரு ரகசியத்தையும் அருணகிரியார் வெளிப்படுத்துகின்றார். இந்த ரகசியம் அவருக்கு வள்ளிமலையில் ப்பட்டது. இதைத் தான் குன்னம் :ே வெளியாக்கி விட்டது" என்றார் கந்தர் அல்ங்காரத்தில் (24) பத்திரம்