பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/738

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

730 திருப்புகழும் தெய்வங்களும் (மயில்) குட்டுகின்றனர். அருணகிரியாரும் - வேல் வகுப்பு, வேல்வாங்கு வகுப்பு என இரண்டு வகுப்புக்கள் வேலின் பெருமையைக் காட்டப் பாடியுள்ளார். 9. திருப்புகழும் மயிலும் இனி, வேலுடன் இணைந்து நிற்கும் மயிலைப் பற்றிக் கூறுவோம். திருப்புகழ் எங்ங்னம் பாடவேண்டும் என்று விநாயகமூர்த்தி அருண்கிரியாருக்கு அருளியபோது 'பகூசியெனும் உக்ர துர்கத் தையும், திக்கது மதிக்கவரு குக்குடத்தையும் வைத்து உயர் திருப்புகழைச் செப்புக - என்று கட்டளையிட்டார். அக்கட்டளையை நெஞ்சிற் பதித்தவராய்த் தமது பாடல்களில் ஆங்காங்கு மயிலையும் சேவலையும் கி.பி: பாடினார் அருணகிரியார். அவர் எவ்வாறு மயிலைச் சிறப்பித்துள்ளார் என்பதை ஆராய்வோம் 1. மயிலின் அலங்காரம்: அங்கவடி, மணி, சேணம் பூட்டிய குதிரைபோல அலங்காரங் கொண்ட்து (3) நாகப்பூண் பூண்டது. காலில் முத்து, பவளம் கோத்துக் கட்டிய அலங்காரம் பூண்டது. "துப்பு முத்துச் சரண பச்சை வெற்றிப் புரவி" (1117) 2. மயிலின் ஒளி - கலாபத்தின் ஒளி: பொன்மலை போலவும், வெள்ளிமலை போலவும், மரகத மலை போலவும், கங்கை - யமுனை போலவும், ஒளிகளை வீசுங் கலாபம் (1048 ம்95 அக் கலாப்த்தை எட்டாத வெளிமட்டும் விரிக்கும் (கந் அலங் 65 மயிலின் இறகு பல நிறங்களைக் கொண்டது 'ப்லநிறமிடைந்த விழுசிறை ய்லர்ந்த பருமயில் (164) வேலின் பேரொளியையும் பசுமை நிறத்தையும் கொண்டது. நிகரில் அயில்வெயில் எழு பசுமைய நிறமுளதான மயில் (1005) 3. மயிலின் ஆற்றலும் வேகமும்: (1) விநாயகரொடு பந்தயமிட்டு முருகர் உலகெலாம் மயிலின்மீது வலம்வந்தபோது, மயிலின் வேகத்தின் ஆற்றலைக்கண்டு விநாயகக் களிறு (அஞ்சிப்) பிளிறியதாம்