பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 67 போர்க்கெழும் படைகளுடனே சூரர்களாகிய வஞ்ச அரக்கர்கள் பயப்ப்ட (போர்க்கள்ம்) ரணகளம்ாக அன்று நீ போய் ஏழுகிரிகளும் பெரிய நிலப்பரபும் அசைவு கொள்ள, வேகத்துடனே ஏழுகடல்களும், மேருழலையும் கலக்கம் கொள்ள, கண்கள் (படர்வு) படர்ந்துள்ள பீலிகளைக் கொண்ட ப்ரிசுத்தமான் தகுதியுள்ள (சூரனாம்) மயில் மீது (மாறு கொண்டு) அதை அடக்கும் என்ண்ம் கொண்டு வீற்றிருந்த கிரிய வேலனே! பொழுது போகும் வரையில் பெரிய (வள்ளிமலைக்) ు அலைந் சென்று. (குறவர்மகள்) வள்ளிகாலிலும் ந்து வணங்கிப்(புளிஞர்) வேடர்களுக்குத் தெரியாமல் திரிந்து, தினைப்புனத்தில் H-H = 顯 புதிதாக மடலேறு துணிந்திருந்த அந்த பரிதாப நிலையும் குறைந்து (வள்ளியின்) புளகம் கொண்டிருந்த கொங்கையை அணைந்த பெருமாளே. (குமரியர்களோடு உழன்று நைந்து விடலாமோ) 1021. (கற்பு ஆர் மெய்ப் பாட்டை) கற்பு நிறைந்த மெய்யான பாடு - நிலைமையினின்றும் தவறிய வழியிற் செல்லும் சொற்களின் (பாகை) வெல்லம் போன்ற இனிப்பைக் காட்டி, (புழுகொடு) புனுகு சட்டம் கஸ்துாரி இவைகளின் கலவி பூசப்பட்ட (இளநீரை) இளநீர் போன்ற கொங்கையையும். (கட் சேலை) சேல் மீன் போன்ற கண்ணையும் காட்டி, (குழல்) கூந்தலின் அழகையும் தோளையும் காட்டி (மத் யில் தரகர் வைத்துப் ப்ேசி) கைக்குக் காசு கேட்டுத் தெருவில் மயில் நிற்பது போல நிற்கின்ற வேசையர்களுக்கு நான் அடிமைப் பட்டு, உயர்ந்ததும்,அகலம் உள்ளதுமான அ நிறைந்த கட்டிலின்மேல் (நெட்டுர்) நெட்டு - நெடிது. நீண்ட நேரம்_ஊர மேலே ஊர்ந்து அசைவுறும் அந்தக் (க்ட்த்து) புணர்ச்சியில் எப்போதும் (மாயும்) அழிகின்ற (நெட்டாசைப் பாட்டை) நீண்ட ஆசை அனுபவத்தைத் (துரிசு அற) குற்றம் நீங்கும்படி விட்டு வில்கிப் போய்ப் பக்தி மான்களுடன் உள்ளம் நெகிழ்ந்து, (உன்னை)ப் பாடிப் போற்றி உன் கழலிணைகளிற் பணிவேனோ! பணியும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமோ! 1019-ஆம் பாடலில் தேவசேனையை அணைந்த பெருமாளே எனத்துதித்து, அதே சந்தத்தில் இந்தப் பாடலில் வள்ளியை அணைந்த பெருமாளே எனத் துதித்துள்ளார்.