பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 69 மலையையே மத்தாக அமைத்துக் கடலைக் கடைந்து (விஷம் தாக்க) (மைச்சு) - மைத்து கறு நிறங்கொண்டு (ஆ.விக் காக்கைக் கடவுள்) உயிர்களைக் காக்கின்ற கடவுளாகிய திருமாலை (விட்டார்). (அவர் செய்த உபதேச மொழிகளைப் பின்பற்றாது விட்டவர். களாகிய திரிபுரத் தலைவர் மூவர்களின் - மூன்று கோட்டைகளும் - மும்மதிலுக்கும் - ஒருகிரி - ஒப்பற்ற மேருமலையில் இரண்டு முனைப்பக்கங்களையும். வில்லை வளைப்பது போலக் (கோட்டி) வளைத்துப் பின்பு ஒருசிறிது (புன்னகை செய்து பற்களைக் காட்டி, நெருப்பை மூள வைத்த சிவ பிராற்கு - (தத்வார்த்தக் குருபரன்) உண்மைப் பொருளை உபதேசித்த குரு பரமூர்த்தி என்று சொல்லப்படுகின்ற "சங்கம் தரித்தோய் மூ எயிற்கும் தனித்தொவ் வொருவர் ஒழிய, மற்றத் துங்க அசுரர் மோகிதராய்த் தொழுது நமது வசமானார்", "அவரை நம் மாயை தடவிப் பிணிக்க அறியாது தண்டுழாய்த்தார்ப் பண்ணவனே" - உபதேச ஞானவரோ. 2087, 2090 திரிபுரம் எரித்த வரலாறு - திருப்புகழ்ப் பாடல் 285-பக்கம் 206 கீழ்க்குறிப்பு காக்கைக் கடவுளை விட்டார் - என்பது திரிபுர சம்மாரத்தில் திருமால் அம்பாக அமைந்தராதலின் - திருமாலாம் அம்பைவிட்டார் - செலுத்தினார் எனவும் பொருள் தரும். சிவபிரான் தழலெழச் சிரித்த நெருப்பு முன் சென்று எரிக்கத் தேவர்களின் வேண்டுகோளின்படி திருமாலாகிய ஒரம்பையும் இறைவன் செலுத்த அந்த அம்பு அந்தச் சிரிப்பு நெருப்பைப் பின்தொடர்ந்து எரிந்த புரத்தைத் தானும் எரித்தது என்று உபதேச காண்டம் கூறுகின்றது. சிரிப்பினால் வெந்து தொலைந்த முப்புரங்களைக் கண்டு. எமையும் நாடி விட்டருடி என்றிரக்க - சரம் விடுத்தான்;சரத்தினில் எரி, புன் மூரலின் எளி பின் தழி இத்தொடர்ந்து, அடியனேன் எரிந்த புரத்தினை நானும் எரித்தனன் என்று புகழ் பெறவேண்டுமென்றிரக்க, வரத்தினை மூரலெரி சர எரிக்கு வழங்கவே, கூட மாய்த்தது.' - உபதேசகாண்டம் - ஞான -2153-2154 குலவரையே சிலையாகக் கூரம்பு தொடுத்தானைப் புரமெரிய. அப்பர் 4.7.10. அம்புந்தி மூ எயிலெய்தவன். சம் 1-10-11. x சிவனுக்கு உபதேசித்தது - பாடல் 327 பக்கம் 314 குறிப்பு.