பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 முருகவேள் திருமுறை 18-ஆம் திருமுறை நரகக்குழி என்பதை அவர் அணுகமாட்டார், கெட்ட நோய்கள் அவரை அனுகா, புலி, கரடி, யான்ை இவைகளுக்கு அவர்கள் கலங்கிப் L/LL/LI L/t_ LDJTL_t_JTFT+FGoT. (சு-உ) கந்தரலங்காரத்தில் ஒரே பாடல் கற்று அறிந்தவர்கள்கூட, பொல்லா அரசர், யமன், புலி, கரடி, யானை இவைகளுக்குப் பயப்படமாட்டார்கள்; இருள்சூழ் நரகை அவர் அனுகார்; துவர்ட நோய் அவரை அணுகா. (கு - உ) சலம் = கோபம். துலங்கா நரகம் = இருண்ட நரகம் ஒரு கவிக்கே இத்துணை ஆற்றல் உளதாயின் அலங்கார நூறும் வல்லவர்க்குக் கிடைக்கும் இம்மை மறுமைப் பேறுகள் சொல்லும் தகையவோ! -: Ο : - சில பிரதி ரூபங்களில் அதிகமாகக் காணப்பட்ட செய்யுள்கள் 102. தரிசனப் பாடல் திருவடி யுந்தண்டை யுஞ்சிலம் புஞ்சிலம் யூடுருவப் பொருவடி வேலுங் கடம்புந் தடம்புயம் ஆறிரண்டும் மருவடி வான வதனங்க ளாறும் மலர்க் கண்களுங் குருவடி வாய்வந்தென் னுள்ளங் குளிரக் குதிகொண்டவே. (பொ - உ) முருகவேளின் திருவடியும், அத் திருவடியில் உள்ள தண்டையும், சிலம்பும், (சிலம்பு) கிரெளஞ்சமலை (ஊடுருவும்படி) தொளைபடும்படி (பொரு) பொருத (வடிவேலும்) கூரிய வேலாயுதமும், (கடம்பும்) கடப்பமாலையும், (தடம்) விசாலமான தோள்கள் பன்னிரண்டும், (மரு) ஞான நறுமணமே உருக்கொண்டதுபோன்ற (வதனங்கள்) ருமுகங்கள் ஆறும், (அவரது) தாமரை மலர்போன்ற (பன்னிரு கண்களும் ஒரு குருமூர்த்தியின் உருவுடன் வந்து என்னுடைய உள்ளங் குளிரும்படி (குதிகொண்டவே உள்ளத்திற் பதிவு பெற்றுள்ளன - நிலைத்துள்ளன. (சு - உ) திருவடி தண்டை, சிலம்பு, வேல், கடப்ப- மாலை, பன்னிரு தோள், று திருமுகம், பன்னிரு கண்கள் இ விளங்க வந்த குருமூர்த்தித் நீே காட்சி என் உள்ளத்திற் அப்படியே நிலைபெற்று விட்டது. r (கு உ) உபே மூர்த்தியாய் வந்த காட்சி என் உள்ளம் குளிர உள்ளத்தில் jo கூத்தாடுகின் து: நிலைபெற் Д]] விட்ட து: இத்தகைய பேறு மிகப் பெரியோர்க்கே கிட்டும் -