பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 முருகவேள் திருமுறை 18 - திருமுறை திருந்தனிகேசன் துணை கந்தரலங்கார ஆராய்ச்சி - О :("வேலர், அலங்காரத் துட்பொருளை யாய்வதுவே தேகங் கலங்கா வலங்காரம்.......... தணிகை யுலா] இந்நூல் முருகக் கடவுளுக்கு மிகவும் உகந்த பாமாலை. சிவபிரானுக்கு எங்ங்ணம் தேவாரம் ருசிக்குமோ அங்ங்னம் முருகவேளுக்குத் திருப்புகழ் இனிக்கும்; சிவபிரானுக்குத் திருவாசகம் எங்ங்னம் ருசிக்குமோ அங்ங்னம் முருகவேளுக்குக் கந்தர் அலங்காரம் இனிக்கும்; முருகபிரானது திருவடிமுதல் திருமுகம் வரையும் உள்ள அங்கங்களின் சிறப்பையும், அவர் ஊர்தி, படை கொடி இவைகளின் பெருமையையும் எடுத்தோதும் நூலாதலால் இந்நூலுக்குக் கந்தர் அலங்காரம் என்னும் திருநாமம் வாய்த்தது. உதாரணமாக: (i) சிற்றடி (iv) திருமுகம் "தாவடியோட்டு" (15) "பத்தித் திருமுகம்" (47) "சேல்பட்" (40) (v) ஊர்தி (மயில்) "குசை நெகி ழா" (11) (ii) திருவரையிற் கிண்கிணி "ஒருவரைப் பங்கில்"(13) (vi) படை (வேல்) "மண்கமழுந்தி" (93) "ஆலுக் கணிகலம்" (62) (iii) பன்னிரு திருக்கை (vii) கொடி (சேவல்) "குப்பாச வாழ்க்கை"(14) "படைபட்ட" (12) 2. "அருணைத் திருக்கோபுரத்தே வடவருகிற் சென்று கண்டு கொண்டேன்" எனவரும் காப்புச் செய்யுளால் இந்நூல் திருவண்ணாமலையிற் புனைதல் பெற்றிருத்தல் வேண்டு மென்று தோன் ,ேது. நூற்பயன் கூறுஞ் செய்யுளில் "அலங்கார நூற்றுள் ஒருகவி தான் கற்றிந்தவரே" என வருதலால் இந்நூல் நூறு செய்யுள்கள் கொண்டாதாயிருத்தல் வேண்டும். அப்போதைக்கப்போது பாடப்பட்ட தனிச்செய்யுள்கள் பின்பு ஒரு நூலாகக் கோக்கப்பட்டிருக் கலாமோ என்றும் தோன்றுகின்றது. அருணகிரியார் வரலா று பக்கம் 158, 159 பார்க்க நூற்றுக்கு மேற்பட்ட ஆறு பாடல்களின்