பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 159 13. இடமணித்தென்றல் தேங்கா வணமும் மதகளி வேந்துடன் சேர்ந்தவிண்ணோர் தேங்கா வனமுனை யவ்வேற் பணியெனுஞ் சேயிடமேல் தேங்கா வனமுந் தளர்நடை யாயஞ்சல் செண்பகப்பூந் தேங்கா வனமுங் கழுநீ ரிலஞ்சியுஞ் செந்திலுமே. (ப உ) தேங்கு - நிறைவாகிய, ஆவன - பசு நிரைமேய்த்த திருமாலையும், மும்மத - மும்மதம் பொழியும், கரி -- அயிராவதத்தையுடைய, வேந்துடன் - இந்திரனோடு, சேர்ந்த கூடிய, விண்ணோர் - தேவர்களையும், தேம் - அத்தேவர்கட்கிடமாகிய (அமராபதியையும்), காவல்-காப்பது, நம் நமது, முனைய கூரியவேல் - வேலாயுதத்தின், பணிதொழில், எனும் - என்று கட்டளையிட்ட, சேய் b - குமாரக் கடவுளின் வாசஸ்தலம், மேல் முன்னேறியிருக்கின்றன, தேங்கா - திகைத்து, அனமும் அன்னப்பட்சியும், தளர் நடையாய் - தோற்கின்ற நடையை உடையவளே, அஞ்சல் - பயப்படாதே, (அவை) செண்பக - செண்பக விருட்சத்தால், பூம் - பொலிந்த தேங்காவனமும் இனிய ஞ்சோலையும், கழுநீரிலஞ்சியும் - செங்கழுநீர் மடுவும், செந்திலும் ருச்செந்துாருமாம். (எ - று) நீ - தோன்றா எழுவாய். அஞ்சல் - பயனிலை, ஏ - அசை (க உ) அன்னமுந் தோற்கு நடையையுடையவளே! விஷ்ணு முதலிய தேவர்களையும் அமராபதியையும் காக்கும்படி வேலையனுப்பிய குமாரக் கடவுளினது திருச்செந்திற்பதியும் பூங்காவனமும் செங்கழுநீர்ச்சுனையும் அணித்தாயிருக்கின்றன; பயப்படாதே (கு உ) துறைப்பொருளிலன்றிப் பொதுவாகப்பொருள் கூறின் இலஞ்சியும் செந்திலுமே என்பது-இலஞ்சித் தலமும் செந்திற்பதியும் எனவும் பொருள் காணக் கிடக்கின்றது. இலஞ்சி என்னும் தலத்தைப்பற்றித் திருப்புகழ்975 பக்கம் 820 பார்க்க மன்னிலஞ்சி ஆழு மலரிலஞ்சி யுஞ்சூழ்ந்த தென்னிலஞ்சி வாழுந் திருக்குமரன் இலஞ்சி முருகன் உலா-74, இலஞ்சி-குளம், மலரிலஞ்சி-மகிழம்பூ:தென் இலஞ்சி-தலம் இடமணித்தென்றல் - என்னுந் துறைக்கு உதாரணம் - திருப்புகழ் 668 கீழ்க்குறிப்புப் பார்க்க