பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை செந்திற்பதியினரும், அக்கரம் ஆறுடையார் - சடாகூடிரப் பொருளானவரும், தெய்வ. தெய்விகமாகிய, ஆரண - வேதம் பூசித்த தந்தி - பாம்புபோன்ற பிரகாரத்தையுடைய, நகர் - திருச்செங்கோட்டு மலையையுடையவருமாகிய (கந்தசுவாமி)யினது, அர அரத்தாற் கூர்மையிட்ட கர - திருக்கையிற்றரித்த சத்தி - வேலாயுதமானது, இன்றாகில் - இல்லாவிட்டால், அத்தேவர் நண்பதி - அத் தேவர்கள் பொருந்திய பொன்னகரமும்,ந இல்லாமற் போவது மன்றி, கர-வஞ்சக நிறைந்த ரக்கர் அசுரரும், அதம் தீர்வர் - இறப்பும் ஒ ழிவார்கள். ஈர்வர் செகமெங்கும் உலக முழுவதையும் நிர்மூலமாக்கியும் விடுவார்கள். (எ . று).அரக்கர் எழுவாய்.அதந் தீர்வர்,ஈர்வர் பயனிலை ஏ-அசை (க உ) பரமசிவனுக்குக் குருவாய்ச் செந்தூரில் வாழும் சடாக்ஷரப் பொருளாகிய திருச்செங்கோட்டு மலையையுடைய கந்தசுவாமியினது திருக்கைவேல் எழுந்தருளாவிடில் அமராபதி யழிந்து போவதுமன்றி அசுரரும் ஸ்திரமாயிருந்து உலக முழுவதையும் நாசஞ் செய்துவிடுவார்கள். (கு உ) (1) பகன் என்னும் சூரியனுடைய கண்ணும், பூடா என்னும் சூரியனுடைய பல்லும் தக்கயாகத்தில் கேடுற்றன. "பல்லிலனாகப் பகலைவென்றோன்", "பகன் தாமரைக் கண் கெடக் கடந்தோன்" -திருக்கோவை-60,184; திருப்புகழ் 390, பக்கம்487, (2) சடாகூடிரம்-திருப்புகழ் 326,327 குறிப்பு (3) தெய்வ - வாரணத் தந்து - இல் நகரர் - அகர சத்தி தெய்வயானையாகிய தேவசேனைக்கு (தந்து) திருமங்கிலிய நூலை அணிந்து, (இல்) இல்லாளாகக் கொண்ட (ந) சிறந்த கரர் கரத்தினருடைய (அ) அந்த (கரம்) ஒளி உடைய (சத்தி) வேல் எனவும் பிரிக்கலாம் எனத் தோன்றுகிறது. (4) திருச்செங்கோடு-வேதம் பூசித்த மலை பாம்பு போன்ற மலை - திருப்புகழ் - மறைகுலாவு செங்கோடை - திருப்புகழ் 374, பக்கம் 446; செழுமறை தேர்-புஜக பூதர-அந்தாதி.82 நாககிரி-பெயர்க் காரணம்திருப்புகழ் 380 குறிப்பு தெய்வத் திருமலைச் செங்கோடு" கந்தரலங்காரம் 23