பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 177 கொடுத்தருளும், என்னா-என்று நினையாத அமண் சமணர், சேனைகூட்டங்களை, உபாதி - வருத்தமான, கழு கழுவிலேற்றி, மலங்கற்கு கலக்கமுற்றழியும்படிக்கு உரைத்தோனலது - வாது மொழிந்த சம்பந்தப் பிள்ளையுமாகிய குமாரக் கடவுளையன்றி, இல்லைதெய்வங்களே - பிரத்தியகூடிமான தெய்வங்கள் வேறில்லை. (எ-று) தெய்வங்கள்- எழுவாய். இல்லை -பயனிலை ஏஅசை (க உ) தன்னடித் தொண்டர்க்கு நன்னெறியாகத் தேவாரத்தை மொழிந்தருளினவரும் திவ்விய ஸ்தலங்களைத் துதியாமலும்,திருநீற்று மகத்துவத்தைக் கைக்கொள்ளாமலும் இருந்த சமணர்கள் கழுவேறும்படி வாதினால் வென்ற வருமாகிய சம்பந்தாவதாரங் கொண்ட குமாரக் கடவுளேயன்றி வேறுதெய்வமில்லை. (கு உ) (1) இச் செய்யுளிற் சம்பந்தப் பெருமானே தெய்வம் என உறுதியுடன் கூறி அவர் பெருமையைச் சிறப்பிக்கின்றார். பித்தனை எங்கள் பிரானை அணைவ தெளிதுகண்டீர் அத்தனை ஞானசம் பந்தனைப் பாதம் அடைந்தவர்க்கே" - ஆளுடை பிள்ளையார் அந்தாதி - 90. எனவரும் திருவாக்கு இங்கு உணரற்பாலது. (2) திருநீறிடும்பொழுது சீகாழி, அமராவதி, திருத்தணி என்னும் மூன்று தலங்களையும் தியானித்து மொழிந்து திருநீறிடுக என்கின்றார் அருணகிரியார். சீகாழி (சம்பந்தர்) பிறந்த ஊர், அமராவதி (முருகன்) பிறந்த ஊர்,திருத்தணி (முருகன்) வள்ளியை மணந்து அமர்ந்த ஊர். (3) சம்பந்தப் பெருமானாக வந்த குகனே தெய்வம் என்கின்றார்: "குஹாத் தேவ மந்யம் நஜாநே நஜாநே" - சுப்ரமண்ய புஜங்கம் (ஆதி சங்கரர்). மேலும் ஆதிசங்கர பகவத் பாதாள் (செளந்தர்ய லஹரி75ல்) தரணி தர கன்யே தயா வத்யா தத்தம் தவஸ்தன்யம் பய. பாராவார: ஆஸ்வாதிய த்ரவிடசிசு ப்ரெளடானாம் கவீனாம் அஜநி கமரீய கவயதா (உலகின்ற உமாதேவியே! தயவுடனளித்த அம்ருத ப்ரவாஹம் போன்ற உமது முலைப்பா லருந்தி, த்ரவிடசிசு - சம்பந்தர் பிரசித்தர்களான கவிகளுக்குள் மனோகரமான கவியாக ஆகிவிட்டார்) எனப் போற்றுகின்றனர்.