பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (கு உ) (1) யாகத்தில் மறையோர் அஜத்தை (ஆட்டை) வதஞ்செய்தலைக் கண்டிக்கின்றார் அருணகிரியார். "கருணைக் கருணகிரி" என்பது இதனாலும் பெறப்படும். (2) "அன்புறப் பார்" என முருகனை வேண்டித் துதியுங்கள் என உபதேசிக்கின்றார். செம்மனக் கிழவோர் அன்பு தா என்றுன் சேவடிப் பார்த்திருந்தலச"-திருஇசைப்பா 149 32. நல்லறிவு பெற காமத்தை வெல்ல சித்திக்கத் தத்துவ ருத்திர பாலக செச்சைகுறிஞ் சித்திக்கத் தத்துவ ரத்தியின் மாவென்ற சேவகவிச் சித்திக்கத் தத்துவர் வாய்மொழி மாதர்க் - கெனுந்திணைவா சித்திக்கத் தத்துவ ருத்தப் படாதுநற் சேதனமே. (ப - உ. சித்திக்க - அடியேனுக்குக் கிடைக்க அருள வேண்டும். தத்துவ - தத்துவ சொரூபியே! ருத்திர பாலக - சிவனது மைந்தனே! செச்சை - வெட்சிமாலை யணிந்த குறிஞ்சித் திக்க குறிஞ்சி நிலத் திசைக்கு இறைவனே! தத்து - அலைமோதுகின்ற, உவர் உவர்ப்பையுடைய, அத்தியில் - சமுத்திரத்தின்கண், மாமாவுருக்கொண்டசூரனை, வென்ற செயித்த சேவக - வீரனே இச்சித்து - விரும்பி, இக்கத்து-கரும்பும், அத்துவர் அந்த சிவந்த பவளமும், வாய்வாயும்,மொழி-மொழியுமாகும்.மாதர்க்கு-மடவார்க்குஎனும் திணைஎன்று நலம்புனைந்துரைக்குங் காமநூலை, வாசித்து ஒழியாமற் படித்து, இக்கத்தத்து-இதற்கினமான வெகுளியினால், வருத்தப்படாது - துன்பமடையாது, நற்சேதனம் - நல்ல ஞான அறிவு (எ று) நீ தோன்றா எழுவாய், சித்திக்க அருளவேண்டும்- பயனிலை ஏ-அசை (க-உ) தத்துவ சொரூபியே! சிவனது புத்திரனே! குறிஞ்சி நிலத்து இறைவனே! சமுத்திரத்தின்கண் சூரனை வதைத்தவனே! மாதரது சொல்லைக் கரும்பென்றும், வாயைப் பவளமென்றும், நலம் பாராட்டும் காமநூலின் வாஞ்சையையும், வெகுளியையும் விட்டு உன்னை யறியும் நல்லறிவை எனக்குக் கிருபை செய்யவேண்டும்.