பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 183 மாலைக்காலத்தோடு, சேண் - ஆகாசத்தினின்றும், மழை தூங்கும் மழை பெய்கிறது. சங்கது - சங்கினங்களை, இருத்துள உடையதாயிடமகன்ற, வாரிதி சமுத்திரம், கண்டு யிலா ஓயாமல் முழங்குகின்றது, செயல் மாண்ட சிந்தை இந்த விரகதாபத்தினால் ம்ெப்மறந்து கிடக்கின்ற என் மனதை திருத்து ஆற்றுதற்கு உள உரியவர், ஆர் - யார் அன்னை தாயும், செந்தூரை அன்னள் : பகையாகிய செந்திற்பதியையொத்திருக்கின்றாள்; செம்- சிவந்தமேனி - திருமேனியில் என்பு எலும்பையும், உதிருத்துள உதிரத்தக்க திருநீற்றுப் பொடியையுமுடைய, வார் நீண்ட சடை சடாபாரத்தையுமுடைய, ஈசர் - பரமசிவனது மைந்தா - புதல்வனே! இனி - இனிமேல் சகிக்கப்படாதாதலால், செச்சை உனது வெட்சி மாலையை, நல்கு - எனக்கு அளித்தருள வேண்டியது. (எறு) நீ தோன்றா எழுவாய்.நல்கு-பயனிலை ஏ-அசை (க - உ) திருமேனியில் நீறும் எலும்பும் அணிந்த நீண்ட சடாபாரத்தையுமுடைய பரமசிவனது மைந்தனே கார்காலமும் மாலைப்போதும் ஒத்திருக்கின்றன; சமுத்திரமு முழங்குகின்றது. என்னைத் தேற்றுபவ்ர் யாவர்: அன்னையும் பகையாயிருக்கின்றனள், ஆதலால் இனிச் சகிக்கமுடியாது; உனது வெட்சிமாலையைத் தந்தருளவேண்டும். (கு உ) இப் பாடலிற் குறித்த கார்காலமும் மாலைக்காலமும் முல்ல்ைத் திணைக்கு உரியன: மல்குகார் மாலை முல்லைக்குரிய" - நம்பி அகப்பொருள் 15, முல்லை தலைவி கற்பொடும் இருத்தலைக்' குறிக்கும். தாய், கடல் - இவையால் உற்ற வேதனையை எழு கடலின் முரசினிசை.அ(ன்)னையார் கொடுவசை (திருப்புகழ் 145) மாதாவின் வார்மைப் பகையாலே-வாடத் தகுமோதான் (திருப்புகழ் 032) என வருமிடத்துக் காண்க தலைவனது ஊராகிய செந்துார் தனக்கு உடனே கிடைக்கப் பெறாமையின் செந்தூர் பகைத்து நிற்கின்ற நிலையில் உள்ளது என்றும், தன் விரகதாபத்தைத் தாய் அறிந்து உதவாத காரணத்தால் தாயும் செந்துரை ஒத்துப் பகைமை நிலையில் உள்ளாள் - என்றும் கூறியதாம். இனிச் செச்சை நல்கே - என்றது-தலைவ! நீநேரே உடனே வராவிடினும் உனதுமாலையையாவது முந்திதந்தருள் என்றபடி சத்தப் படுமைக் கடலாலே - தட்டுப்படுமப் பிறையாலே சித்ரக் கொடியுற் றழியாதே - செச்சைத் தொடையைத் தரவேணும் - திருப்புகழ் 476.