பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 187 (ப உ) சிற்றம்பலத்து - ஞான வெளியாகிய, ஐயர் சுவாமியும், அன்பு - பக்தியென்னும், நெய் - நெய்யை வார்த்து, நூல் - ஆகம நூலென்னும், திரி - திரியை, சிந்தை இருதயமாகிய, இடும் தீபமேற்றுகின்ற, சில் - தகழியிலிட்டு, தம்ப ஆன்மாவுக்குப் பற் றுக்கோடாகிய, லத்தை வர கிருபையுண்டாகும் பொருட்டு ஞானதீபம் - மெய்ஞ்ஞான தீபத்தை இட்டார்க்கு ஏற்றின அடியார்களுக்கு பரிசில் ஈவாக, தம்பலத்தை - தமது சாயுச்சியமென்னும் பலனை, அருளும் - கிருபை செய்கின்ற, செந்துாரர் - திருச்செந்தினாயகருமாகிய கந்தசுவாமியினது, பகைக் குலமாம் சத் துருக்களாகிய அசுரக் குலத்தை வேரறுத்த சிற்று சிறிய, அம்பல பாணமல்ல, தைப்பது - என்னிருதயத்தில் தைத்து வருத்துவது, அவர் அக்கடவுளது, அம் - அழகிய, தோளில் புயத்திலணிந்த இந்தீவரம் நீலோற்பலமாகிய பாணமே (எறு)-இந்தீவரம்-எழுவாய், தைப்பதுபயனிலை ஏ - அசை, (க உ) இருதயத்தைத்தகழியாக்கி, அன்பாகிய நெய்யை வார்த்து, ஆகமமாகிய திரியையிட்டு, ஞானத்தை விளக்காயேற்றின அடியார்களுக்குச் சிதாகாசமான சாயுச்சிய பதவியை யருளுகின்ற திருச்செந்தினாயகர் சத்துருசங்காரஞ் செய்த பாணமிருக்க அவர் புயத்தி லணிந்த நீலோற்பல மாலையே மன்மதன் பாணத்தி லொன்றாக என் ஆகத்தில் தைக்கின்றது. (கு.உ) (1) "சிற்றம்பலத் தெங்கள் ஐயனை"அப்பர் 527. (2) ஞான விளக்கு - செய்யுள் 99ம் பார்க்க 'மனக்கோயி லுள்ளிருத்தி யுறவாதி தனையுணரு மொளி விளக்குச் சுடரேற்றி" பெரிய புராணம் வாயிலார் நாயனார் 8 உடம்பெனு மனைய கத்துள் உள்ளமே தகளி யாக மடம்படு முணர்நெய் யட்டி உயிரெனுந் திரிம யக்கி இடம்படு ஞானத் தீயால் எரிகொள விருந்து நோக்கில் கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே. அப்பர் 4-75 4. இதன் ஈற்றடி கடம்பமர் காளை கழலடி, (அவர்) தாதை கழலடி (இரண்டும்) - காணலாம் - எனவும் பிரிந்து பொருள் தருகின்றது ஒரு மகி ழ்ச்சி க்கு இடமாம். ஞா னவிளக்கு ஏற்றுவர் பெரியோர் என்பதற்கு