பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தா தி 193 செல்வற்பாற் சென்று எனக்கென்ப தோர் தீனம் - செல்வர் சென்று ஈ எனக்கென்னும் இம்மாற்றம்..... மானம் துடைப்பதோர் வாள் - நளவெண்பா கலிதொடர் 71. (3) சுனைநயந்துரைத்தல்' என்னும் துறைக்கு மைவிழி சிவப்பவும் வாய் வெளுப்பவும் காட்டும் தண்சுணை எவ்விடை இருந்துள தியம்புவாய்" - -எனவரும் கந்த புராணச் செய்யுளையும் காண்க.5.24.124 43. திருவடியைக் கூட செய்யசெந் தாமரை யில்லாத மாதுடன் செந்தினைசூழ் செய்யசெந் தாமரை மானார் சிலம்பிற் கலந்துறையுஞ் செய்யசெந் தாமரை யென்னுங் குமார சிறுசதங்கைச் செய்யசெந் தாமரை சேர்வதென் றோவினை சேய்தொலைத்தே. (ப உ) செய்ய தினைவிளை நிலத்தையுடைய, செம் -ஒழுங்கான, தாமரை - சிறுகுடியென்னு நகரத்தாருக்கு இல்லாது தெரியாமல், அ மாதுடன் - அப்புனங் காத்திருந்த வள்ளியம்மையை, செந்தினை சூழ் செய் - செந்தினைக்கொல்லைப் பயிரைச் சூழ்ந்துகொண்டிருந்த அசெம் - காட்டாடும், தா - தாவுகின்ற, மரை - கடம்பையும், மான் - மானும், ஆர் - நிறைந்த சிலம்பில் மலையின்கண்ணே, கலந்துறையுஞ்செய்ய o காந்தருவமணம் புணர்ந்துறையுங் குமாரக்கடவுளே! செம் - அழகிய, தாமர் கொன்றை-மாலையையுடைய பரமசிவன், ஐ என்னும் குமார ஐயனேயென்று சொல்லப்பட்ட குமாரக் கடவுளே! சிறு - சிறிய, சதங்கை - சதங்கையணிந்த செய்ய அழகிய, செந்தாமரை உனது சிவந்த திருவடித் தாமரையைச் சேர்வது என்று - யானடையுங்காலம் என்றைக்கு வினை இரு வினைகளையும், சேய் - தூரத்தில், தொலைத்து ஒழித்துவிட்டே (எறு) சேர்வது எழுவாய், என்று- பயனிலை, ஒ-ஏ-அசை (க உ) மலையிற் குடியிருக்குங் குறவர் அறியாமல் தினைப்புனத்தில் வள்ளியம்மையை மணம் புணர்ந்தவனே! கொன்றை மாலையையுடைய பரமசிவனால் ஐயனே யென்று துதிக்கப்பட்ட