பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* - ---- - 226 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (ப-உ) திங்களும் - சந்திரனையும், மாசுணமும் அரவத்தையும், புனைவார் - தரித்துக்கொள்ளுகின்ற பரமசிவனது, செல்வன் - புதல்வனும், என் என்னுடைய, ஐயிரு திங்களும் பத்துமாதமென்னுங் காலவளவுக் குட்பட்டுத் தாயின் கர்ப்பத்திலுறும் பிறவித் துன்பத்தையும், மா - மிகவும், சுணமாக்கும் நீறாக்கத்தக்க மகத்துவம் பொருந்திய, பதாம்புயன் - திருவடித் தாமரையை யுடையவனுமாகிய குமாரக் கடவுளது. செந்தில் - திருச்செந்திற்பதியை, அன்னாள் - ஒத்து விளங்காநின்ற இம் மங்கையினுடைய, திங்கு - தீமைகளை, அளும் . உண்டாக்கும், மாசு - (ஆத்துமகோடிகள் செய்யும் பாவங்களாகிய) குற்றத்தை உள் - ஆராய்கின்ற, நமன்போல் - யமனையொத்த விழியும் . கண்ணையும், செழும் - செழுமை தங்கிய, கரும்பும் - கன்னலும், திம் - தித்திப்பான, களும் - தேனும், மாசுண (ஒப்பாகாமையால்) குற்றமுறும்படிசெய்கின்ற,நன்றான-மிகவும் இனிமையான,மாற்றமும்மொழியையும், தீட்டின் எழுத உன்னாற் கூடுமானால், நன்று நன்மையாகும்.(எ-று)மடலூர்தல்-தோன்றா எழுவாய். நன்று-பயனிலை.ஏஅசை (க-உ) சந்திரனையுஞ் சர்ப்பாபரணத்தையுந் தரித்த பரமசிவனது மைந்தனும், என் பிறவியை மாற்றித் தமது திருவடியை யருள்வோனுமான குமாரக்கடவுளது செந்துரையன்ன இம்மங்கையினது யமனையொத்தகண்ணையும், தேனினுங் கன்னலினும் இனிய மொழியையும் உன்னால் எழுதக் கூடுமானாலாகும்; கூடாததால் மடலூர்தல் நன்றன்று. (கு-உ) (1) இது மொழிநடை யெழுதல் அரிதென விலக்கல்" என்னுந்துறை.அவயவத்தருமைசாற்றல், (1) சிந்தா மணியுந் திருக்கோ வையுமெழு திக்கொளினும் நந்தா உரையை எழுதலெவ் வாறு நவின்றருளே’ - (வெங்கைக் கோவை 107). (2) மின் திருவாய், மொழியுறு காஞ்சி திகழுறு சீரங்கம் முந்திவற்றை... எழுதுவையோ, உய்த் தெழுதுவையேற் "கிழியெனக் கண்டோ ருரையா தெழுதக் கிழிதனையே கோடீச்சுரக் கோவை 113. (*கண்டோர் கிழி என்னாமல் உயிருள்ள பொருள் என்றே கூறும்படி, கிழித்துவிடு என்று சொல்லாதபடி என இரு பொருள்)