பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தாந்தாதி 231 (4) கங்ண்கயைச் சூடிய வரலாறு-செய்யுள் 53 குறிப்பைப் பார்க்க (5) செய்தவமே - "காழியர் தவமே" என்புழிப்போல (பெரிய புராணம் சம்பந்தர்-91) 75. சிவநெறியில் நிற்றல் செய் தவத் தாலஞ்சு சீரெழுத் தோதிலந் தீதலருஞ் செய்தவத் தாலஞ்சு கம்பெறச் சேயுரைக் கேற்றுருப்போய்ச் செய்தவத் தாலஞ்சு வைக்கனி யீன்றதென் னேம்வினையே செய்தவத் தாலஞ்சு கின்றன. மும்மலச் செம்மல்கொண்டே (ப-உ) செய் தவத்தால் - அழகிய தவத்தினாலாவது, அஞ்சு சீரெழுத்து - சிறந்த பஞ்சாக்ஷரத்தை ஒதிலம் - துதிக்கின்றோமில்லை; தீது-தீமை,அலரும்-விளையும்,செய்-நரக பூமிதவ-அழிந்துபோகவும், தாலம் - உலகம் எல்லாம், சுகம் - நன்மையை, பெற அடையவும், சேயுரைக்கு - சம்பந்தப்பிள்ளையாக அவதரித்துத் திருவாய் மலர்ந்தருளியதேவாரத்தினால்,ஏற்றுருப்போப்-ஆணுருமாறிசெய்தசிவந்த அத்தாலம்-அப் பெண்ணுருவாகிய பனை,சுவைக்கனி-இனிய பழத்தை ஈன்றது - தந்தது, என்னேம் - என்று துதிக்கின்றோமில்லை, வினையே செய்து தீவினையே புரிந்து அவத்தால் வந்த துன்பத்தினால், அஞ்சுகின்றனம் - அச்சமுற்றிருக்கின்றனம், மும்மலச் செம்மல் கொண்டு - மும்மலமாகிய போர்வையைத் தரித்துக்கொண்டு. (எ-று)யாம்-தோன்றா எழுவாய். அஞ்சுகின்றனம்-பயனிலை.ஏ-அசை இவ்விரண்டுகவியுங் (7475)குளகம் (கு.உ) நெஞ்சமே உலகத்தார் நரகம் எய்தாமல் இன்பத்தை யடையவும், ஆண்பனை பெண்பனையாகிப் பழத்தைக் கொடுக்கவும் சம்பந்தராயவதரித்துத்தேவாரத்தையருளிச்செய்தகுமாரக் கடவுளைத் துதியாமலும், அவரது பஞ்சாக்ஷரத்தை யநுஷ்டிக்காமலும், தவத்தில் முயலாமலும், தீவினைத் தொடர்பால் மும்மலப் பிணிப்புண்டு யாம் அவத்தின் முயன்று அஞ்சுகின்றனம். (1) ஐந்தெழுத்து - "சிவாயநம தவப்பேறிருந்தால் தான் ஐந்தெழுத்துஒதும் பாக்கியம்கிடைக்கும். "நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன்" - திருவாசகம்-திருவேசறவு10.