பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 235 (ப-உ) திரி-நீயென்றுந்திரிவாயாக புரத்து-பூர நாளில்,அப்புகடல் சூழ்ந்த புவி- பூவுலகத்தை தர பெற்றருளும்ப்டிக்கு தோன்றி அவதரித்த உமாதேவி, சிலை தனதுள் பாகமாகிய இடது சூரத்தால் மேருவர்கிய வில்லை, பிடிப்ப-பிடித்துக்கொள்ளச்செய்து,திரிபுரத்துமுப்புரத்தின் மேல், அப்புத் தலைப்பட விஷ்ணுவாகிய பாணத்தைப் பிரயோகஞ் செய்யும் பொருட்டு, நாண் தனது பாகமாகிய வலதுகரத்தால் வாசுகி யாகிய நாணை, தொடும் ஏறிட்ட சேவகன் - பரமசிவனது, கோத்திரி - ருச்செங்கோட்டுமலையை, புரத்து - நகரமாகக் கொண்ட,அப்புத்திர-அந்தமைந்தனே'மால்மருக- திருமால் மருகோனே யென்றும், திருக்கை - திருக்கையென்னும் மீனையுடைய, அம்போதி-சமுத்திரத்தின்கண்,ரிபு-அசுரராகிய சத்துருக்களது.ரத்தப் புத்துறை - இரத்தங்களையே புதியவுறையாகத் தோய்ந்த ஆயுத என வேல்ாய்தத்தை புடையவனே யென்றும், செப்பு - புதழ்ந்து இசால்லி, நெஞ்சே."மன்மே (எ று) நீ - தோன்றா எழுவாய். திரி பயனிலை ஏஅசை, (க-உ, நெஞ்சமே பூரநாளிற் பிறந்த லோகமாதாவாகிய பார்வதி வில்லைப் பிடித்துக்கொள்ள நாணேற்றிட்டுத் நீதி: மேல், விஷ்ணுவாகியப்ாணப்பிரயோகஞ்செய்த பரமசிவனது மைந்தனாகிய திருச்செங்கோட்டுமலையதிபனே திருமால்மருகோனே! சமுத்திரத்தில் அக்ரரை வதைத்த வேலாயுதனே என்று சொல்லிக்கொண்டு திரிவாயாக கு-உ 'திருக்கை ஒருவகை மீன், திருக்கையம்போதி (95) எனவரும் செய்யுளையும் பார்க்க (1) தேவியும் பூர நாளும் பகவதி நாள். பூரம்' திவாகரம், பிங்கலம், (திருவாதிரை - அரன்நாள், திருவோணம் மாயோன் நாள், விசாகம்-முருகன் நாள்-என்பதுபோல). (2) திரிபுரமெரித்தபோது தேவியின்திருக்கை வில்லை ஏந்திய திருக்கை திருப்புகழ் 686, பக்கம் 82 கீழ்க்குறிப்பு மலை சிலை ஒருகையில் வாங்கு நாரணி-திருப்புகழ் 507 பக்கம் 156 குறிப்பு. திரிபுரம் எரித்தவரலாறு-அந்தாதி77-ன் குறிப்பைப் பார்க்க (3) கோத்திரி - மலை. இச் செய்யுளில் அர்த்தநாரீசனுடைய திருக்கோலம் கூறப்பட்ட காரணத்தால் கோத்திரி (மலை) அர்த்தநாரீசருடைய திருவுருவம் உள்ள திருச்செங்கோட்டுமலை எனக் கொள்ளப்பட்டது. (4) கடலினிடையே அசுரர்களை அட்டது " வட்டத்திரைக் கடலில் மட்டித் தெதிர்த்தவரை வெட்டித் துணித்த பெருமாளே." திருப்புகழ்306,1226. *