பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 239 நித்திலம்-முத்து விளைகின்ற, சலராசி-சமுத்திரமும், கா-சோலையும், அலவன்-சந்திரனும், பரியங்கம் கட்டிலும், குழல் புல்லாங் குழலும், பெற்ற - என்னைப் பெற்றவளாகிய, தே மொழி - இனிய மொழியையுடைய, வஞ்சி - தாயின், காவு காவலும், அல இவைகளெல்லாம் பெரிதல்ல, வன் - வலிய, பரியானலம் - வடவாமுகாக்கினி போன்று வருத்துகின்றன, அன்றிலும் (காமசின்னமாகிய) அன்றிற்பட்சியும், தென்றலும் (தேராகிய தென்றற் காற்றும் (எ று) அன்றிலும் தென்றலும் எழுவாய் பரியானலம் பயனிலைஏ-அசை (க-உ) மயில்வாகனனே! அன்பர்க்கருளும் வேலாயுதனே! இலஞ்சிப்பதியோனே! எனக்குப் பகைவராகிய ஊராராலும், காமனாலும், கடலாலும், சோலையினாலும் கட்டிலினாலும், வேய்ங்குழலாலும், தாயின் காவலாலும் உண்டாகும் இடர் பெரிதல்ல; அன்றிலும் தென்றலுமே வடவாமுகாக்கினி போன்றிருக்கின்றன; ஆகையால் எனக்குஅருள்செய்ய இதுசமயம் (கு-உ () விரகதாபம் கொண்டாரை வருத்துவன - ஊரார் வசைப்பேச்சு, மன்மதன், கடல், பொழில், திங்கள், கட்டில், புல்லாங்குழல், பெற்ற தாயின் காவல், அன்றில், தென்றல் அந்தாதி செய்யுள் 7,9,35,40,70பார்க்க (2) இலஞ்சி - திருப்புகழ் பெற்ற தலம் இருப்பிடம் முதலியன திருப்புகழ்975 பக்கம் 820 தலைக்குறிப்பிற் காண்க. அந்தாதி செய்யுள் 13 பார்க்க - (3) பரியானலம் - பரி - குதிரை. அனலம் - நெருப்பு. வடவாமுகாக்கினி - பெண் குதிரை முகத்தின் வடிவோடு கடற்குள் தங்கியிருந்து யுகாந்தத்தில் மேலே கிளம்பி உலகத்தை எரித்து விடுவதாகக் கருதப்படும் தீ - வடவை - பெண்குதிரை (பிங்கலம்) தக்கயாக உரை475 82. காம மிக்க கழிபடர் கிளவி தென் றலை யம்பு புனைவார் குமார திமிரமுந்நீர்த் தென்றலை யம்புய மின்கோ மருக செழுமறைதேர் தென்றலை யம்பு சகபூ தரவெரி சிந்திமன்றல் தென்றலை யம்பு படுநெறி போயுயிர் தீர்க்கின்றதே.