பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (3) வேதாகமம் - உரைத்தது - சம்பந்தராய்த் தேவாரம் பாடினது. சம்பந்தர் அருளிய தேவாரத்தைச் சுருதித் தமிழ்க்கவி, ஆரணகித கவிதை, உபநிட மதுர கவிதை, நெறிகாவியச் சிவ நூல் ஆகமவேத புராண நூல், வேதக் கவி, மறைநூல் என்றெல்லாம் அருணகிரியார் சிறப்பித்துள்ளார்.(திருப்புகழ் 280,1049,1007,655,716,778,917) (4) தீக்கடவுள் (அறுமுகப் பெருமானாம்) பொறிகளைத் தாங்கமுடியாதுதவித்தது. : "தீயின் பண்ணவன் வேர்த்துடல் புழுங்குற மெலிவில் தாங்கியே, பேர்த்தொரு பதமிடப் பெறாது வல்லைபோய், ஆர்த்திடு கங்கையின் அகத்துய்த்தானரோ"-கந்தபுராணம்1-11-85 84. திரு அருளின் பெருமை சிவசிவ சங்கர வேலா யுததினை வஞ்சிகுறிஞ் சிவசிவ சங்கர வாமயில் வீர செகந்திருக்கண் சிவசிவ சங்கர மாவை யெனுந்திற லோய்பொறைவா சிவசிவ சங்கர மான்பட்ட வாவொளி சேர்ந்தபின்னே. (ப-உ) சிவ ஏக வஸ்துவான, சிவ - பரமசிவனிடத்தில், சம் - உற்பவித்த கர - திருக்கரத்தில், வேலாயுத வேலாயுதத்தையுடைய முருகோனே! தினை -தினைப்புனத்தையுடைய, வஞ்சி-பெண்ணாகிய, குறிஞ்சி - குறிஞ்சி நிலத்தில், வசி - வாசஞ்செய்கின்ற வள்ளிநாயகியினது, வசங்கரவா - பக்கத்தை விட்டகலாத, மயில்வீர மயிலேறுஞ் சேவகனே! செகம் - உலகத்தின்கண், திரு சிறந்த கண் விழியினால், சிவ - கோபி, சிவ - கோபி, சங்கர - எல்லாரையும் அழிக்கின்ற, மாவை - சூரனுருக்கொண்ட மாமரத்தை எனும் என்று வேலாயுதத்தை யேவும், திறலோப் வீரனே பொறை வாசி - மிகுந்த பொறுமையென்னும் பாணத்தின் வசிவசம் - கூர்மையினிடத்தில், கரகோபமுதலிய,மான் பட்ட-மிருகங்கள் விழுந்துவிட்டன, ஒளி-உனது திருவருளாகிய பிரகாசம், சேர்ந்தபின் என்னிற் கலந்தவுடனே. (எ று) கரமான் எழுவாய்.பட்ட-பயனிலை.ஆ.அசைஏஅசை