பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை 85. மனைவாழ்க்கைச் சேறு ஒழிய சேந்த மராத்துடர் தானவர் சேனையைத் தெண்டிரைக்கண் சேந்த மராத்துடன் கொன்றசெவ் வேல திருமுடிமேற் சேந்த மராத்துட ரச்சூடி மைந்த திளைத்திளைத்தேன் சேந்த மராத்துட ரின்னாரி யென்னுமிச் சேறுபுக்கே (ப-உ) சேந்த கந்தனே மராத்துடர் - கடப்பமாலி, கையைப் புனைந்து, தானவர் சேனையை அசுரர்கூட்டங்களை, தெள் - தெளிந்த திரை - அலையையுடைய கடலினிடத்தில், கண் சேந்து - விழிகள் சிவந்து,அ-அந்தமராத்துடன்-மாமரமாய் நின்ற சூரனுடன்,கொன்றவதைசெய்தசெவ்வேல-சிவந்தவேலாயுதத்தையுடையோனே திருமுடி மேல் அழகிய சிரசின்கண், சே-இளமையான, இந்து சந்திரனையும், அம்கங்காசலத்தையும், அரா - சர்ப்பத்தையும், துள் - துள்ளலை, தர கொடுக்கும்படி, சூடி - தரித்த பரமசிவனது, மைந்த புதல்வனே! திளைத்து-மூழ்கி,இளைத்தேன்-மெலிந்துவருந்தினேன்.சே-என்னைக் காத்தருள் வாய், தமரா சுற்றத்தாராக, துடர் பற்றிய, இல் - மனை வாழ்க்கையும், நாரி - பெண்ணாசையும், என்னும் என்று சொல்லப்பட்ட இச்சேறு-இந்தச்சேற்றில், புக்கு பிரவேசித்து (எ.டி) நீ-தோன்றாஎழுவாய்.சே-பயனிலை.ஏ-அசை (க-உ) கடப்பமாலையைப் புனையுஞ் சேந்தனே! சமுத்திரத்தின்கண் மாமரமாய் நின்ற சூரனோடு அசுரர் கிளையை யழித்த வேலாயுதனே! சந்திரனையும், கங்கையையும், சர்ப்ப ஆபரணத்தையும் தரித்த பரமசிவனது மைந்தனே! என்னைச் சூழ்ந்திராநின்ற சுற்றத்தார். மனைவி, மனை என்னும் சேற்றில் மூழ்கி வருந்துகின்றேன்,இனியாகிலும் என்னைக் காப்பாற்றவேண்டும் (கு.உ. (1) மராத்துடர்-மராம்-கடம்பு:துடர்-தொடர்-பூமாலை. (2) கடலிடையே சூரனையும் அசுரர்களையும் அட்டது . செய்யுள் 80,78-குறிப்புக்களைப் பார்க்க (3) ப்ரபஞ்சமென்னுஞ்சேற்றைக்கழிய-கந்அலங்.1