பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை 90. மனம் ஒடுங்குதல்வேண்டும் சித்தத் தரங்கத்தர் சித்தியெய் தத்திரி கின்றதென்னர்ச் சித்தத் தரங்கத்தர் சந்ததி யேசெந்தி லாய்சலரா சித்தத் தரங்கத்த ரக்கரைச் செற்றகந் தாதிங்களிஞ் சித்தத் தரங்கத்தர் சேயா ரணத்தந் திகிரியையே. (ப-உ) சித்த இருதயமானது, தரங்கத்தர் - நிலைப் படாமல் அலைபோற் புரளுந்தன்மையுடையவர், சித்தி - மோகூத்தை எய்த அடையும்படி, திரிகின்றது. அலைந்து திரிகின்றது, என் - என்ன காரணம்,அர்ச்சித்து-பூசைசெய்தே அத்தர்-சுவாமியாகிய,அங்கத்தர்எலும்பை மாலையாக வணிந்த பரமசிவனது சந்ததியே - மைந்தனே! செந்திலாய் - திருச்செந்திற் பதியோனே! சலராசி - சமுத்திரத்தின்கண், தத்தரம் - தங்கடங்கள் வலிமையை, கத்து - ஆர்ப்பளித்துச் சொல்லிய, அரக்கரை - அசுரரை செற்ற செயித்த கந்தா - முருகனே திங்கள் - சந்திரன், இஞ்சி - மதிலின்கண், தத்து - தவழுகின்ற, அரங்கத்தர் - திருவரங்கநாதருடைய, சேய் - பிள்ளையாகிய (பிரம்மாவின்), ஆரண வேதம் பூசிக்கின்ற, தந்தி - பாம்பு போன்ற, கிரி - திருச்செங்கோட்டு மலையில் வாழும், ஐ-சுவாமியே! (எ-று) திரிகின்றது-எழுவாய்.என். பயணி ഞി.ജ്-ുഞ്ഞ്, (க.உ) பரமசிவனது மைந்தனே திருச்செந்திற்பதிக்- கதிபனே! சமுத்திரத்தின்கண் அரக்கரை மாய்த்தோனே கந்தனே வேதம் பூதித்த திருச்செங்கோட்டு மலையில் வாழ்கின்றவனே! சித்த நிலையற்றவர்கள் வெளிப் பூசை செய்து மோகூத்தை யடையும்படி அலைந்து திரிகின்ற தென்னகாரணம்? (கு.உ) (1) சித்தத் தரங்கத்தர் - சித்தி எய்த அர்ச்சித்துத் திரிகின்றதென்-எனஅந்வயப்படுத்துக சித்தம்நிலைபெறாமல் பூசைசெய்வது பயன்தராது. கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன் றெண்ணப் பொய்யொன்று வஞ்சக நாஒன்று பேசப் புலால்கமழும்