பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 அந்தாதி ஆராய்ச்சி (2) நூலிலுள்ள நூறு செய்யுள்களின் முதலெழுத்துக்கள் சி. சீ, செ, சே, தி, தீ, தெ தே என்னும் எட்டெழுத்துக்களுள் அடங்குதல் கவனிக்கத்தக்கது. (3) இந் நூல் வரலாறு - பெரும் புலமை வாய்ந்தவரும், தம்மொடு வாது செய்து தோற்றவர்களின் காதைக் குறடு கொண்டு குடைந்து தோண்டும் வழக்கத்தைத் தமது கல்விச் செருக்காற் கையாண்டவரும், மிக அற்புதமான வாக்கிற்பாரதத்தைப் பாடியவருமான வில்லிபுத்துாரருக்கும் அருணகிரி யார்க்கும் ஒருமுறை தருக்கம் உண்டாயிற்றென்றும், அப்போது ஆசுகவியாக அருணகிரியார் பாடிய நூல்தான் கந்தரந்தாதி என்றும், அந்நூலுக்கு உரை அவ்வில்லிபுத்துாரரே, உடனுக்குடன் கூறிவந்தன ரென்றும், அதில் திதத்த' என்று தொடங்கும் 54 ஆவது செய்யுளுக்கு அவர் உரைகூறமாட்டாது திகைத்துத் தோல்வி யுற்றனரென்றும், அதற்கு அருணகிரிநாதரே உரை அருளிச் செய்தனரென்றும், பின்பு ஏனைய செய்யுள்களுக்கு வில்லிபுத்துாரரே உரைகூறி முடித்தனர் என்றும் கூறுவர். இத் தருக்கத்தில் பாடமாட்டாதோ, உரைகாண முடியாதோ தோல்வியுற்றவர் காதை அறுப்பதாக ஒட்டினதற்கு ஒத்தவாறு வில்லிபுத்துாரரது காதை அறுத்து இழிவுபடுத்தாமல், இனிக் கருணைக்கு விரோதமான இவ்வழக்கத்தை நீங்கள் விட்டுவிடவேண்டும் என அவருக்குப் புத்தி சொல்லி அவர் கையிலிருந்த குறடை எறியச்செய்த நமது அருணகிரியாரின் பெருங் கருணையை என்னென்று கூறுவது . இக்கருணையைக் கருதியும் கருணைக் கருணகிரி என்னும் வழக்கு எழுந்தது. போட்டியிட்டுப் பாடப்பட்ட நூலாதலால், பொருள் கானன்பது எளிதான முறையில் விளங்காத வழியில் அமைக்கப்பட்டுளது. அதனாற்போலும், கந்தரந்தாதியைப் பாராதே, 'கழுக்குன்றத்து மாலையை நினையாதே' என்ற உலகவழக்கும் ஒன்று தோன்றிற்று - (அருணகிரிநாதர் வரலாறு பக்கம் 98, 150 பார்க்க ) * "அக்கிளிதான்-வில்லிபுத்து ரான்செவியின் மேலரிவாள் பூட்டியன்று வல்லபத்தின் வாதுவென்று வந்ததுகாண்" -தணிகை உலா 351. "எதிரும் புலவன் வில்லிதொழ எந்தை உனக்கந் தாதி சொல்லி ஏழைப்புலவர் செவிக் குருத்தோ டெறியுங் கருவி பறித்தெறிந்தே" -திருமலை முருகன் பிள்ளைத் தமிழ் வருகை .ே