பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தேவேந்திர சங்க வகுப்பு 309 6. அழுத்தமாய் அமைந்துள்ளனவும், சிறுபிறை போன்றனவுமான பற்களை உடைய யமதுாதர்கள் (யமனது ஏவலாளர்கள்) என்னுடைய உயிரைக் கொள்ளை கொள்ள கவர்தற்கு வந்தால், (அப்போது) நான் வருந்துதலைக் கண்டு என் எதிரே வந்து என்னை (ஏன்று கொள்ளும்) ஆட்கொண்ட ருளும் குயில் அனைய தேவி 7. இடுகின்ற (பலி) பிச்சையைக் கொண்டு திரிகின்ற (இரவலர்) யாசகர்களின் (இடர்கெட) துன்பம் ஒழிய இடும் பிச்சையை இடுகின்ற (அல்லது இடர் கெடவிடு - இடரைத் தொலைக்கும்) (மனம்) மனத்தையும் (கரதலம்) திருக்கரத்தையும் உடைய (ஏகாம்பரை) காஞ்சி - ஏகாம்பரநாதரின் தேவியாகிய ஏலவார்குழலி, (இந்திரை) (முத்தி) லக்ஷ்மி, கவர்ச்சியான அங்கங்களை உடைய சுமங்கலி - 8. எழுதிவைத்துள்ள படமோ என்று வியந்து சொல்லத்தக்க நிலையில் இருந்து, (இருள்) அஞ்ஞான இருளை அறுத்து ஒழிக்கும், ன ஒளி வீசும், தனது திருவடி இரண்டையும் ழுேதே மெளன. ஞானிகளுக்கு ஏக அந்தம் - சுகம் - முடிவான ஒன்று எனப்படும் முத்திநிலை னந்தத்தை (அல்லது, ஏகாந்த தனிப்பட்ட அல்லது ச்சயமான சுகத்தைத்) தருகின்ற (சுந்தரி) பாசம், அங்குசம் இரண்டையும் திருக்கரத்திற்கொண்டுள்ள (சுந்தரி) அழகி. 9. கரணமும் - இந்திரியங்களின் சேஷ்டைகள், மரணமும் இறத்தல், மலமொடு - ஆணவம், கன்மம், மாயை என்னும் மூவகை மலங்கள், உடல்படு இத் தேகம் படவேண்டிய அனுபவிக்கவேண்டிய, (கடு) பொல்லாத வினை- வினைகள் இவையெலாம் கெட கெட்டு அழியும்படி (நினை) தன் மனத்தில் நினைத்து அவ்வாறே வர்ம்பாலிக்கும், காலாந்தரி கால் அந்த்ரி - யுகாந்த கால முடிவில் விளங்குபவள். கந்தரி : (அடியார்களின் நெஞ்சக்) குகையில் இருப்பவள்; நீல அஞ்சனி கறுப்பு நிறமுள்ள மையைப் பூசிக்கொள்பவள், நஞ்சுமிழ் விஷம் வீசுகின்ற