பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. திருவேளைக்காரன் வகுப்பு 335 19. வாழி' என்று நாள்தோறும் மறவாமல் துதித்தால் (சரணவாரிஜம்) தனது திருவடித் தாமரையை (அளிக்கும்) தந்து அருளும் (உபகாரக் காரன்) உபகாரி (எவன் எனில் - அவன்தான் வள்ளி வேளைக்காரன்). 20. (மாடமதில்) மாடங்களும் . உபரிகையுள்ள வீடுகளும் மதில்களும் சூழ்ந்து நிறைந்துள்ள (திரிகூட கிரியில்) குற்றால நன்னகரிலும், (கதிர்செய் மாநகரியில்) கதிர்காம நகரிலும் (கடவுள் ஆயக்காரன்) தேவர் கூட்டத்தை உடையவன் . கூட்டத்தினில் விளங்குபவன் - (எவன் எனில் அவன்தான் வள்ளி வேளைக்காரன்). 21. வாள் - வாள் போலக் கூரிய - அல்லது ஒளி பொருந்திய (எயிறு அது உற்ற) பற்கள் உள்ள (பகுவாய் தொறும்) - அகன்ற வாய்தோறும் வாய் ஒவ்வொன்றிலும், நெருப்பைக் கக்கும் வாசுகி என்ற பெரும் பாம்பை எடுத்து உதறுகின்ற (வாசி) குதிரையாம் மயில் வாகனன் (எவன் எனில் அவன்தான் வள்ளி வேளைக்காரன்). 22. (வாள கிரியை) சக்ரவாளகிரியைத் தன்னுடைய காலால் (இடிய) பொடியாகும்படி (பொருது) சண்டை செய்து, (வாகை) வெற்றி (புனை) கொள்ளும் (குக்குட பதாகைக்காரன்) கோழிக் கொடி கொண்டவன் (எவன் எனில் . அவன்தான் வள்ளி வேளைக்காரன்). 23. (மாசு இல் உயிருக்கு உயிரும்) குற்றம் இல்லாத உயிருக்கு உயிராயும், (ஆசு அல்லது மாசு இல் உணர்வுக்கு) குற்றம் இல்லாத (உணர்வுக்கு உணர்வு) அறிவுக்கு அறிவும், வானில் அணுவுக்கு அணுவும் (விண்ணில் விளங்கும்) அனுப் பொருளுக்கும் அணுப்பொருள் நுண்மைப் பொருளுக்கும் நுண்மைப் பொருளாயும் விளங்கும் (உபாயக்காரன்) தந்திரக்காரன் - சூழ்ச்சி வாய்ந்தவன் (எவன் எனில் - அவன்தான் வள்ளி வேளைக்காரன்).