பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. திருவேளைக்காரன் வகுப்பு 339 28. மீன் உலவு கிர்த்திகை . நகூடித்திரமாக உலவுகின்ற கார்த்திகை மாதர்களின் குமாரன், (தன்னைத்) தியானிப்பவர்கள் மோகூடி வீட்டைப் பெறும்படி வைக்கும் அருள்கொண்ட தயாமூர்த்தி - (எவன் எனில் அவன்தான் வள்ளி வேளைக்காரன்) 29. மேனை என்னும் பெயர் கொண்ட அரிவைக்கு (பர்வதராஜன் மனைவியாம்) மாதுக்குப் பேரன், (யாவரும்) மதித்துப் போற்றும்படியான (திறல்) வலிமை வாய்ந்த வீரன், அசுரர் குலத்தை அழிப்பதில் சூறைக்காற்று (சுழற் காற்று) போன்றவன் (எவன் எனில் அவன்தான் வள்ளி வேளைக்காரன்) 30. வேதியர் - மறையவர்க்கு (வெறுக்கை) செல்வநிதியாய் விளங்குபவன், (அநாதி) ஆதி - தொடக்கமில்லாத முதல்வன், பரவஸ்து மேலான பொருள் - பரம்பொருள், விசாக நக்ஷத்திரத்துக்கு உரியவ்ன், விகற்பம் - விகற்பமான வேறுபாடு உள்ளனவான பலவித வேட்டுவக் கோலக்குமரன், வேங்கை மர உருவத்தினன், சைவநெறி நற்றவ விருத்த (கிழ) வேஷத்தினன் ஆகிய பல வேஷ உருவங்களைப் பூண்டவன் (எவன் எனில் அவன்தான் வள்ளி வேளைக்காரன்) 31. வேடர்களுடைய தினைப்புனத்தில் தன் சுய உருவத்தை மாற்றிக்கொண்டு (நாரத) முநிவர் சொன்ன பேச்சைக் கேட்டு (வியாகுல மனத்தினொடு) கவலைப்பட்ட கலக்க மனத்துடன்) (போம்) சென்ற (விற்காரன்) வில் ஏந்திய வேட உருவத்தினன் (எவன் எனில் அவன்தான் வள்ளி வேளைக்காரன்) 39 வெகு ரூபக்காரன்: "இன்னே பல உருவங்கொடு யாண்டுங் குமரேசன் நன்னேயமொ டர்டுற்றுழி" - கந்தபுராணம் 1-14-13. பொதுவாக - வெகு ரூபங் கொண்டவன் எனலுமாம்.