பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பெருத்த வசன வகுப்பு 345 7. ரிக் வேதம் முதலிய சகல கலைகளும் (இதற்கு இது) அறுமுகன் அருளிய இந்தப் பெருவசனத்துக்கு (எதிரென) ஒப்பாகும் என்று (இணைக்க அரியதும்) இணை சொல்ல முடியாததும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே) 8. நான் இறக்கும்பொழுது (எனது எதிர்) என்முன்பே (நடக்கும்) வந்து நிற்கும் யமதூதர்களைக் (கடக்கவிடுவதோர் வென்று விலக்க வல்லதான ஒரு (இயற்கை) நிலைமையை (மனோதிட வலிமையை) அருள்வதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே) 9. (நெருக்குவன) நிரம்பப் பொருள்களை எடுத்துச் சொல்வதான (உபநிஷத்துக்களின்). வேதத்தின் ஞான காண்டங்களில் (இறுதிகள்) முடிவான பொருள்கள் (நிரப்பு கடையினில்) முடிவு கட்டும் முடிவில், (இருப்பை உடையதும்) இருப்பிடத்தைக் கொண்டு விளங்குவதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே) 10. தி, மண், (வெளி) வான், (மருத்து) காற்று (வனம்) நீர் (என) என்று - பஞ்சபூதங்கள் என்று (நிறைத்த) நிறைவு பெறுவதான (நெறிமுறை) ஒரு தத்துவ முறையில் (கரக்கும்) அகப்படாது ஒளித்துக்கொள்ள வல்ல ஒர் உருவப்பொருளும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே) 11. (நினைப்பு) நினைவும், (நினைவதும்) நினைக்கப்படும் பொr b, நினைப்பவ ம் - என்னும் கையும் (அறு) அற்ற (நிலத்தில்) இடத்தில் நிலைபெற்று நிற்கும்படி (நிறுத்த உரியதும்) நிறுத்தவல்ல ஆற்றலை உடையதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே) 12 (நிலைத்த அடியவர்) பத்தி வழியில் மனம் நிலைத்து நிற்கும் அடியவ்ர்கள் (மலைத்தல் அதுகெட) பிரபஞ்ச விஷயங்களில் பிரமித்தல் என்பது கெட்டொழியவும், (நிவிர்த்தி உற) அவைகளின் சிக்கினின்றும் விடுதலைபெறவும், (அனுபவிக்கும்) உதவுகின்ற அனுபவ நிலையைத் தரும் (நி: யமும்) செல்வப் பொருளும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே)